Home உலகம் வெனிசுலாவின் தற்காலிக அதிபர் மடூரோ

வெனிசுலாவின் தற்காலிக அதிபர் மடூரோ

656
0
SHARE
Ad

nikolasகாரகாஸ், மார்ச்.8- வெனிசுலா அதிபர் ஹியூகோ சாவேசின் உடல் இன்று அடக்கம் செய்யப்படுகிறது.

தென் அமெரிக்க நாடான வெனிசுலாவின் அதிபராக கடந்த 1999 முதல் பதவி வகித்தவர் ஹியூகோ சாவேஸ், 58.

இவர்  புற்றுநோய் காரணமாக நேற்று முன்தினம் மரணமடைந்தார். அமெரிக்க ஏகாதிபத்தியத்தை எதிர்த்த சாவேஸ் தென் அமெரிக்க நாட்டின் பிரபலமான தலைவராக இருந்தார்.

#TamilSchoolmychoice

இன்று இவரது உடல் தலைநகர் காரகாசில் அடக்கம் செய்யப்படுகிறது. இறுதி சடங்கில் உலக தலைவர்கள் பலர் பங்கேற்கின்றனர். கடந்த ஆண்டு நடந்த தேர்தலில் அமோக வெற்றி பெற்ற சாவேஸ் சிகிச்சைக்காக கியூபா சென்றதால், புதிய அதிபராக பதவி ஏற்கவே இல்லை.

துணை அதிபரான நிகோலஸ் மடுரோ,  ஆட்சி பொறுப்புகளை கவனித்து வந்தார். சாவேஸ் மரணத்தையடுத்து  தற்காலிக அதிபராக மடூரோ அறிவிக்கப்பட்டு உள்ளார்.

முன்னாள் பேருந்து ஓட்டுனரான மடூரோ  புட்டபர்த்தி சாய்பாபா மீது பக்தி கொண்டவர். 2005ல், தன் மனைவியுடன் வந்து, சாய்பாபாவை தரிசனம் செய்துவிட்டு சென்றார்.சாவேசின் நிழலாக இருந்தவர் மடூரோ.

எனவே அவர் அதிபர் தேர்தலில் போட்டியிட உள்ளார். சாவேஸ் அளவுக்கு மக்கள் செல்வாக்கு பெற்றவராக இல்லாவிட்டாலும்  சாவேசின் இறப்பு காரணமாக ஏற்பட்ட அனுதாப அலையில்  இவர் வெற்றி பெற வாய்ப்பு உள்ளது.

சாவேசின் அமைச்சரவையில் மடூரோ வெளியுறவு துறையை கவனித்து வந்தார். மடூரோவின் மனைவி சிலியா புளோர்ஸ் சட்ட நிபுணராக உள்ளார். இவர் தன் கணவருக்கு அனைத்து விதத்திலும் உதவி வருகிறார்.