Home கலை உலகம் ஸ்டீவ் ஜாப்ஸின் வாழ்க்கை வரலாற்றுப் படத்தின் முன்னோட்டம் வெளியானது!

ஸ்டீவ் ஜாப்ஸின் வாழ்க்கை வரலாற்றுப் படத்தின் முன்னோட்டம் வெளியானது!

617
0
SHARE
Ad

first-கோலாலம்பூர், ஜூலை 2 – ஆப்பிள் நிறுவனர் ஸ்டீவ் ஜாப்ஸ் பற்றிய வாழ்க்கை வரலாற்றுப் படமான ‘ஸ்டீவ் ஜாப்ஸ்’-ன் முன்னோட்டம் சமீபத்தில் வெளியாகி உள்ளது.

‘ஸ்லம்டாக் மில்லினர்’, ‘தி பீச்’  போன்ற படங்களை இயக்கி டேனி பாயலின் இயக்கத்தில், மைக்கேல் ஃபேஸ்பென்டர் நடிப்பில் தயாராகி உள்ள இப்படம் எதிர்வரும் அக்டோபர் மாதம் 9-ம் தேதி வெளியாகும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. அதன் தொடக்கமாகவே இப்படத்தின் முன்னோட்டம் வெளியிடப்பட்டுள்ளது.

வால்டர் இஸக்சன், ஸ்டீவ் ஜாப்ஸ் பற்றி எழுதிய வாழ்க்கை வரலாற்றுப் புத்தகத்தின் உரிமத்தை வாங்கிய சோனி நிறுவனம், தற்போது டேனி பாயல் மூலம் அதனை மெருகேற்றி திரைக்காவியமாகப் படைத்துள்ளது.

#TamilSchoolmychoice

சாதாரணக் கணினியில் சாமானிய மனிதன் அசாத்தியத் துணிச்சலுடன் உலகை மாற்றிக் காட்டிய தருணங்களை இப்படம் மக்களின் கண்முன்னே நிறுத்தும் என்று படக்குழு தெரிவித்துள்ளது.

இப்படத்தின் முன்னோட்டத்தைக் கீழே காண்க: