Home உலகம் சுகாதாரமில்லாத பல்மருத்துவமனையால் ஆஸ்திரேலியாவில் 11000 பேர் எச்ஐவி பரிசோதனை!

சுகாதாரமில்லாத பல்மருத்துவமனையால் ஆஸ்திரேலியாவில் 11000 பேர் எச்ஐவி பரிசோதனை!

414
0
SHARE
Ad

1-dentist-சிட்னி, ஜூலை 2 – ஆஸ்திரேலியாவில் 12 பல்மருத்துவர்கள் சுகாதாரமில்லாதக் கருவிகளை கொண்டு மருத்துவம் செய்து வந்ததால், சுமார் 11000 பேருக்கு எச்ஐவி பரவி இருக்கலாம் என்று அஞ்சப்படுகிறது. இதன் காரணமாக இன்று சுமார் 11000 பேருக்கு எச்ஐவி மற்றும் ஹெபடைடிஸ் ஏ, பி மற்றும் சி ஆகிய நோய்களுக்கான பரிசோதனை செய்யப்பட்டு  வருகின்றது.

ஆஸ்திரேலிய சுகாதாரத்துறை சமீபத்தில் நடத்திய அதிரடியான ஆய்வுகளில், பல்வேறு இடங்களில் சுமார் 12 மருத்துவர்கள், தங்கள் நோயாளிகளை கிருமி நீக்கம் செய்யாத கருவிகளைக் கொண்டு பரிசோதனை செய்தது தெரிய வந்தது. இதனைத் தொடர்ந்து அம்மருத்துவமனைகளில் பரிசோதனை செய்து வந்த சுமார் 11000 பேரை உடனடியாக எச்ஐவி மற்றும் ஹெபடைடிஸ் பரிசோதனைகளை மேற்கொள்ள கட்டாயப்படுத்தியது.

அதிர்ஷ்டவசமாக இதுவரை பரிசோதனை மேற்கொண்ட யாருக்கும், எதிர்மறையான முடிவுகள் வரவில்லை. எனினும், இனி பரிசோதனை செய்பவர்களுக்கு இருக்க வாய்ப்புள்ளதாகவே அந்நாட்டு சுகாதாரத் துறை தெரிவித்துள்ளது.

#TamilSchoolmychoice

இதற்கிடையே இந்த சம்பவத்தில் தொடர்புடைய மருத்துவர்கள் தகுதி செய்யப்பட்டுள்ளதாக மருத்துவ வட்டாரங்கள் கூறுகின்றன.