Home நாடு ஜோகூர் பாரு – உட்லண்ட்ஸ் இடையே புதிய இரயில் சேவை! 5 நிமிடங்களில் சென்றுவிடலாம்!

ஜோகூர் பாரு – உட்லண்ட்ஸ் இடையே புதிய இரயில் சேவை! 5 நிமிடங்களில் சென்றுவிடலாம்!

521
0
SHARE
Ad

KTMசிங்கப்பூர், ஜூலை 2 – சிங்கப்பூருக்கும், ஜோகூர் பாருவிற்கும் இடையில் நேற்று முதல் புதிய இரயில் சேவை ஒன்று தொடங்கப்பட்டுள்ளது.

‘சட்டில் தெப்ராவ்’ (Shuttle Tebrau) என அழைக்கப்படும் அந்த இரயில் சேவையைக் ‘கேடிஎம் – Malaysia’s Keretapi Tanah Melayu’ இயக்குகின்றது.

ஜோகூர் சென்ட்ரலில் இருந்து சிங்கப்பூரின் உட்லன்ட்ஸ் குடிநுழைவுச் சோதனைச் சாவடி வரை 5 நிமிடங்களில் சென்று விடக்கூடிய அளவில் இந்த இரயில் சேவை வசதி உள்ளது.

#TamilSchoolmychoice

இதுவரை, சிங்கப்பூரில் பணியாற்றி வந்த மலேசியர்கள் ஜோகூர் சென்ட்ரலில் இருந்து பேருந்து மூலமாகத் தான் சிங்கப்பூருக்குச் சென்று வந்தனர். சில நேரங்களில் ஜோகூர் – சிங்கப்பூர் பாலத்தில் ஏற்படும் போக்குவரத்து நெரிசலால் வேலைக்குச் செல்பவர்கள் கடும் அவதிக்குள்ளாகி வந்தனர்.

இந்நிலையில், இந்தப் புதிய இரயில் சேவை மலேசியர்களுக்கும், சிங்கப்பூரர்களுக்கும் வரப்பிரசாதமாக இருக்கும் என எதிர்பார்க்கப்படுகின்றது.

நாள் ஒன்றுக்கு ஜோகூர் பாருவில் இருந்து 7 முறையும், சிங்கப்பூரில் இருந்து 7 முறையும் இந்த இரயில் சேவை இயக்கப்படும்.

ஒவ்வொரு பயணத்திலும் 320 பயணிகளை ஏற்றிச் செல்ல இயலும் என்பது குறிப்பிடத்தக்கது.