Home தொழில் நுட்பம் வோல்ஸ்வேகன் தொழிற்சாலையில் ஊழியரைக் கொன்ற ரோபோ!

வோல்ஸ்வேகன் தொழிற்சாலையில் ஊழியரைக் கொன்ற ரோபோ!

463
0
SHARE
Ad

roboபெர்லின், ஜூலை 2 – ஜெர்மனியில் செயல்பட்டு வந்த ‘வோல்ஸ்வேகன்’ (Volkswagen) மகிழுந்துத் தொழிற்சாலையில், ரோபோ ஒன்று ஊழியரைக் கொன்றுள்ளதாகத் தகவல்கள் வெளியாகி உள்ளன.

வோல்ஸ்வேகன் தொழிற்சாலையில், மனிதர்களின் பாதுகாப்பிற்காக அமைக்கப்பட்டுள்ள தொழில்நுட்பப் பிரிவில் ரோபோக்கள் பயன்படுத்தப்பட்டு வருகின்றன. அங்கு, தொழில்நுட்ப வல்லுநராகப் பணி புரிந்து வந்த 21 வயது நிரம்பிய ஊழியர் ஒருவர் தன்னுடன் பணி புரியும் சக ஊழியருடன் ரோபோக்களுக்கான உலோகத் தகடுகளைப் பொருத்திக் கொண்டிருந்தார்.

அப்போது எதிர்பாராத விதமாக, அந்த ரோபோ ஊழியரைத் தனது மார்பில் வைத்து நசுக்கிக் கொலை செய்துள்ளது.

#TamilSchoolmychoice

மிகுந்த அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ள இந்தச் சம்பவம் பற்றி, வோக்ஸ்வேகன் செய்தித் தொடர்பாளர் ஹெய்கோ ஹில்விக் கூறுகையில், “இந்தச் சம்பவம் மனிதத் தவறினால் தான் நடைபெற்றுள்ளது. ரோபோவில் எந்தப் பிரச்சனையும் இல்லை. ஊழியர்களின் பாதுகாப்பிற்காகத் தான் அந்த ரோபோ தொழில்நுட்பப் பிரிவு உருவாக்கப்பட்டுள்ளது. ரோபோவிடம் உண்மையில் தவறு இருந்து இருந்தால், மற்றொரு ஒப்பந்தப் பணியாளர் உயிருடன் இருந்திருக்க மாட்டார்” என்று அவர் கூறியுள்ளார்.