Home உலகம் எகிப்தில் ராணுவத் தாக்குதல்: 100 ஐஎஸ் தீவிரவாதிகள் பலி!

எகிப்தில் ராணுவத் தாக்குதல்: 100 ஐஎஸ் தீவிரவாதிகள் பலி!

549
0
SHARE
Ad

EGYPT-ARMY-715x500எகிப்து, ஜூலை 2- எகிப்தில் ராணுவ முகாம்கள் மீது நடத்தப்பட்ட தாக்குதலுக்குப் பதிலடியாக, ஐஎஸ்ஐஎஸ் தீவிரவாதிகள் 100க்கும் மேற்பட்டோரை ராணுவப்படையினர் சுட்டுக் கொன்றுள்ளனர்.

எகிப்தின் வடக்கு  சினாய் எல்லைப் பகுதியில் ராணுவச் சோதனைச் சாவடிகள் மீது மகிழுந்தில் நிரப்பப்பட்ட வெடிகுண்டுகளைக் கொண்டும், பயங்கர ஆயுதங்களாலும் தீவிரவாதிகள் ஒரே நேரத்தில் தாக்குதல் நடத்தினர்.

ekiஇந்தத் திடீர்த் தாக்குதலில் 60க்கும் மேற்பட்ட ராணுவத்தினர் உயிரிழந்தனர்.

#TamilSchoolmychoice

இதைத் தொடர்ந்து, ராணுவத்தினருக்கும் ஐஎஸ்ஐஎஸ் தீவிரவாதிகளுக்கும் கடும் சண்டை நீடித்தது. துப்பாக்கிச் சூடு, குண்டு எறிதல் என்று அந்தப் பகுதியே போர்க்களமாக மாறியது.

இந்தச் சண்டையில் ஐஎஸ்ஐஎஸ் தீவிரவாதிகள் 100க்கும் மேற்பட்டோர் கொல்லப்பட்டனர்.

தீவிரவாதிகள் தாக்குதலுக்குப் பயன்படுத்திய 20 வாகனங்களும் அழிக்கப்பட்டன.

இதனை எகிப்து ராணுவம் அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது.