Home கலை உலகம் “மதம் பார்ப்பதில்லை, மனிதரைத் தான் பார்க்கிறேன்” – கமலஹாசன் பேட்டி!  

“மதம் பார்ப்பதில்லை, மனிதரைத் தான் பார்க்கிறேன்” – கமலஹாசன் பேட்டி!  

597
0
SHARE
Ad

Papanasam Newசென்னை, ஜூலை 2 – கமல்ஹாசன நடிப்பில் பாபநாசம் படம் நாளை வெளியாக உள்ள நிலையில், பிரபல வார இதழ் ஒன்றிற்கு அளித்துள்ள பேட்டியில் மதம் பற்றியும், மனிதம் பற்றியும் அவர் தெரிவித்துள்ள கருத்துக்கள் அனைவரையும் கவர்ந்துள்ளன.

பாபநாசம் படத்தின் படப்பிடிப்பின் போது அந்தப் பகுதியைச் சேர்ந்த ஆன்மீகப் பெரியவர் ஜியரை, கமல் சந்தித்தது அப்போது பெரிய அளவில் பரபரப்பாகப் பேசப்பட்டது.

நாத்திகம் பேசும் கமல், ஆன்மீகப் பெரியவரைச் சந்திக்கக் காரணம் என்ன என்றும் கேள்வி எழுப்பட்டது. அது குறித்துக் கமல் தற்போது அளித்துள்ள பேட்டியில், “எனக்கு மனிதம் தான் முக்கியம். மதம் முக்கியமில்லை. எல்லோரையும் மனிதராக மட்டுமே பார்க்கிறேன். பாபநாசம் படப்பிடிப்புக்கு இடம் தந்து பெரிதும் உதவியவர் ஜீயர். அவருக்கு நன்றி தெரிவிப்பதற்காகவே அவரைச் சந்தித்தேன். இதில் மதம் முன்னிலைப்படுத்தவில்லை”என்று கூறியுள்ளார்.

#TamilSchoolmychoice

மேலும் இந்த வயதிலும் அவரின் ஆரோக்கியத்தின் இரகசியம் என்ன என்று கேட்கப்பட்ட கேள்விக்கு, தான் கெட்ட பழக்கங்களை அடியோடு விட்டு விட்டதாகவும் தெரிவித்துள்ளார்.