Home கலை உலகம் கமல்ஹாசன் ஒரு சந்தர்ப்பவாதி:முன்னாள் மனைவி வாணி பாய்ச்சல்!

கமல்ஹாசன் ஒரு சந்தர்ப்பவாதி:முன்னாள் மனைவி வாணி பாய்ச்சல்!

1235
0
SHARE
Ad

Vani-Ganapathyசென்னை, ஜூலை 2- கமல் ஒரு முற்போக்குவாதி; வாழ்க்கையை அதன் போக்கிலேயே வாழ்ந்து பழகியவர். அதனாலேயே பல சர்ச்சைகளுக்கு ஆளானவர்.

முதல் மனைவி வாணி கணபதியை விவகாரத்து செய்தார். பின்பு, சரிகாவோடு தாலி கட்டாமலே குடித்தனம் நடத்தி இரண்டு பெண் குழந்தைகளைப் பெற்ற பிறகே அவரைத் திருமணம் செய்தார்.

சில வருடங்கள் முன்பு அவரையும் விவாகரத்து செய்து விட்டு, விவாகரத்தான நடிகை கெளதமியோடு திருமணம் ஆகாமலே ஒன்றாகத் தாம்பத்யம் நடத்தி வருகிறார்.

#TamilSchoolmychoice

அடுத்தவர்களின் விமர்சனத்தைப் பற்றி அவர் ஒருபோதும் கவலைப்படுவதில்லை.

இந்நிலையில், தற்போது முதல் மனைவி வாணியால் ஒரு சர்ச்சை கிளம்பியுள்ளது.

கமல் ஒரு பேட்டியின் போது, முதல் மனைவியோடு விவாகரத்து ஆன சமயத்தில் தனது வங்கிக் கணக்கு சுழியம் (zero) ஆகிவிட்டதாகவும், அதன் பிறகு சொந்த வீட்டை விட்டு வாடகை வீட்டுக்குக் குடிபெயர்ந்து விட்டதாகவும் கூறியுள்ளார்.

பணி நிமித்தமாகப் பெங்களூரிலிருந்து சென்னை வந்த வாணி கணபதி இதுகுறித்துச் செய்தியாளர்களிடம் கூறியுள்ளதாவது:

விவகாரத்து செய்யும் போது, மனைவிக்கு அவ்வளவு பணத்தைக் கொடுக்க எந்த நீதிமன்றமாவது உத்தரவிடுமா? இல்லைவே இல்லை.

அவர் விவகாரத்து ஆன பிறகு வாடகை வீட்டுக்குக் குடிபெயர்ந்து விட்டதாகவும் கூறியுள்ளார்.

இதில் வேடிக்கை என்னவென்றால், எங்களுக்கு விவகாரத்து ஆகும் போது அவருக்குச் சொந்த வீடே இல்லை. மிகப்பெரிய இரட்டைக் குடியிருப்பு ஒன்றில் நாங்கள் வாடகைக்குத்தான் இருந்தோம்.

விவகாரத்து ஆன போது வங்கிக் கணக்கு சுழியம் ஆனதாகக் கூறி அவர் யாரது இரக்கத்தைப் பெற விரும்புகிறார் என்று எனக்குத் தெரியவில்லை. ஒரு வேளை அவரது மகளது இரக்கத்தைப் பெறுவதற்காக இருக்கலாம்.

கமல்ஹாசன் எப்போதுமே ஒரு சந்தர்ப்பவாதி. அவருக்குத் தொழிலிலும் சரி, வாழ்க்கையிலும் சரி பிரச்னைகள் வரும் போது, அந்தப் பழியை மற்றவர்கள் மீது போட்டுவிடுவார். எனக்கு விவாகரத்து ஆகும் போது, அவரது வங்கிக் கணக்கு சுழியமாக இருந்து இருக்கலாம். ஆனால் அதற்கு வேறு சில காரணங்கள் இருக்கலாம். அதனை இங்கே கூற விரும்பவில்லை” என்று பகிரங்கமாகப் பதில் அளித்துள்ளார்.