Home நாடு “இது ஒரு அரசியல் சதி” – 1எம்டிபி குற்றச்சாட்டிற்கு நஜிப் பதில்!

“இது ஒரு அரசியல் சதி” – 1எம்டிபி குற்றச்சாட்டிற்கு நஜிப் பதில்!

530
0
SHARE
Ad

najibகோலாலம்பூர், ஜூலை 3 – 1எம்டிபி விவகாரத்தில் தன் மீதான குற்றச்சாட்டு, அரசியல் காழ்ப்புணர்ச்சி காரணமாக நடக்கும் சதி வேலை எனப் பிரதமர் நஜிப் தெரிவித்துள்ளார்.

இது தொடர்பாகப் பிரதமர் அலுவலகம் வெளியிட்டுள்ள அறிக்கையில், “1எம்டிபி விவகாரத்தில் எழுந்துள்ள குற்றச்சாட்டிற்கு அரசியல் காழ்ப்புணர்ச்சிதான் காரணம். இந்தக்  குற்றச்சாட்டின் மூலம் சீராக இருந்து வரும் நாட்டின் பொருளாதாரத்தைச் சீரழித்து, அரசின் மீது அவநம்பிக்கையை ஏற்படுத்தி, ஜனநாயக முறையில் தேர்வான பிரதமரை நீக்குவதற்கு நடக்கும் முயற்சி தான் இந்தக் குற்றச்சாட்டு” என்று அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதற்கிடையே, வால் ஸ்ட்ரீட் ஜர்னலில் நஜிப் மீதான குற்றச்சாட்டு வெளியானது முதல், மலேசிய ரிங்கிட்டின் மதிப்பு  குறைந்து வருவது குறிப்பிடத்தக்கது.