Home இந்தியா ஜெயலலிதா நாளை கொடநாடு பயணம்; அதற்கு முன் சட்டமன்ற உறுப்பினராகப் பதவியேற்பு!

ஜெயலலிதா நாளை கொடநாடு பயணம்; அதற்கு முன் சட்டமன்ற உறுப்பினராகப் பதவியேற்பு!

577
0
SHARE
Ad

Jayalalitha 300 x 200சென்னை, ஜூலை 3- முதலமைச்சர் ஜெயலலிதா ஆர்.கே.நகர்த் தொகுதி இடைத் தேர்தலில் வெற்றி பெற்றவுடன், சட்டமன்ற உறுப்பினராகப் பதவியேற்க உள்ளதாகத் தகவல் வெளியானது. உடனடியாக அதற்கான ஏற்பாடுகளும் நடந்தன.

ஆனால், திடீரென அப்பதவியேற்பு விழா ஒத்திவைக்கப்பட்டது.

அதன் பின்பு, அதானி குழுமத்துடன்  சூரிய சக்தி தொடர்பான ஒப்பந்தத்தில் கையெழுத்திடுவது, ரமலான் நோன்பு நிகழ்ச்சியில் கலந்து கொள்வது எனப் பல நிகழ்ச்சிகள் இருந்தன.

#TamilSchoolmychoice

ஆனால், எந்த நிகழ்ச்சிகளும் ஜெயலலிதா பங்கேற்கவில்லை. அவருக்கு உடல் நிலை சரியில்லாததால் நிகழ்ச்சியில் பங்கேற்க வில்லை என்று நிதித்துறை அமைச்சர் ஓ.பன்னீர்செல்வம்  தெரிவித்தார்.

மெட்ரோ தொடர்வண்டித் துவக்கவிழாவிற்குக் கூட அவர் நேரில் வராமல், காணொளி மூலம் துவக்கி வைத்தார்.

அவருக்கு மனதாலும் உடலாலும் ஓய்வு தேவைப்படுகிறது.

எனவே, அவர் நாளை நண்பகலில் கொடநாடு செல்லவிருப்பதாகவும், அதற்கு முன்பாக ஆர்.கே. நகர் சட்டமன்றத் தொகுதி உறுப்பினராகப் பதவியேற்க உள்ளதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளன.

கொட நாட்டில் அவர் ஒரு மாத காலம் தங்கியிருக்க முடிவு செய்திருப்பதாகத் தெரிகிறது.

ஜெயலலிதாவின் வருகையை ஒட்டி, கொடநாட்டில் சிறப்பான ஏற்பாடுகள் செய்யப்பட்டு  வருகின்றன.