Home கலை உலகம் எந்திரன் 2  தயாராகிறது : ஒரு வருடத்திற்குத் தேதி கொடுத்தார் ரஜினி!

எந்திரன் 2  தயாராகிறது : ஒரு வருடத்திற்குத் தேதி கொடுத்தார் ரஜினி!

633
0
SHARE
Ad

rajinikanth-super-star-hd-wallpapersசென்னை, ஜூலை3- ஷங்கர் இயக்கத்தில் ரஜினி  மீண்டும் ‘எந்திரன் 2′ படத்தில்நடிக்கிறார். அதற்கான முதற்கட்டப்பணிகள் ஆரம்பமாகிவிட்டன. இந்தப் படத்திற்காகக் கிட்டத்தட்ட  ஓராண்டு காலம் ஒப்பந்தத் தேதி (கால்ஷீட்) கொடுத்துள்ளார் ரஜினி.

அவரது திரையுலக வாழ்க்கையில் ஒரு படத்துக்கு இத்தனை நாட்கள் ஒப்பந்தத் தேதி கொடுப்பது இதுவே முதல் முறை.

2010-ல் ஷங்கர் இயக்கத்தில் ரஜினி, ஐஸ்வர்யா ராய் நடிப்பில் வெளியான படம் ‘எந்திரன்’.

#TamilSchoolmychoice

சன் பிக்சர்ஸ் இப்படத்தைத் தயாரித்தது. தமிழ், தெலுங்கு, மலையாளம், இந்தி என அனைத்து மொழிகளிலும் இப்படம்வெளியாகி வசூலைக் குவித்தது.

அதையடுத்து, அதன் இரண்டாம் பாகமாக ‘எந்திரன் 2′ படம் எடுக்க ஷங்கர் விரும்பினார். ரஜினியும் சம்மதித்தார்.தற்போது, அதற்கான முன் தயாரிப்புப் பணிகள் தொடங்கிவிட்டன.

வில்லனாக  அர்னால்ட் நடிக்கிறார். கதாநாயகி யார் என்பது இன்னும் முடிவாகவில்லை.ஒருவேளை ஐஸ்வர்யாராயே கூட நடிக்கலாம்.

‘எந்திரன் 2′ படத்திற்கான காட்சிகள் வடிவமைப்பு அனைத்துமே முடிந்து, எந்தக் காட்சியில் கணினி வரைகலை(கிராபிக்ஸ்) எப்படி வர வேண்டும் என்பதை முடிவு செய்துவிட்டாராம் ஷங்கர். ஹாலிவுட் நிறுவனங்களுடன் இதற்கான ஆலோசனையில் ஈடுபட்டுள்ளார்.

‘எந்திரன் 2′ படத்தில் நாயகனாக ரஜினி, ஒளிப்பதிவாளராக நீரவ் ஷா, இசையமைப்பாளராக ஏ.ஆர்.ரஹ்மான் ஆகியோர் ஒப்பந்தம் செய்யப்பட்டிருக்கிறார்கள்.

லைக்கா நிறுவனம் வழங்க ஐங்கரன் நிறுவனம் தயாரிக்க இருக்கிறது.

பா.ரஞ்சித் படத்தை 2015ம் ஆண்டிற்குள் முடித்துவிட்டு, 2016ம் ஆண்டு முழுவதையும் ‘எந்திரன் 2′ படத்திற்காக மட்டுமே ஒதுக்கி இருக்கிறார் ரஜினி.