புதுடில்லி, ஜூலை 3- புலம்பெயர்தல்(ரோமிங்) கட்டணம் இல்லாமல் நாடு முழுவதும் ஒரே கைபேசி எண்ணைப் பயன்படுத்தும் வசதியை இன்று முதல் அமல்படுத்த உள்ளதாகத் தொலைத்தொடர்பு நிறுவனங்கள் தெரிவித்துள்ளன.
மே மாதம் 3ம் தேதிக்குள், ஒரே கைபேசி எண்ணைப் பயன்படுத்தும் திட்டத்தைச் செயல்படுத்த, தொலைத்தொடர்பு நிறுவனங்களுக்கு, மத்திய அரசு காலக்கெடு விதித்திருந்தது.
ஆனால் தங்கள் தொலைத்தொடர்பு வசதியில், சில தொழில்நுட்ப மாற்றங்கள் செய்ய வேண்டுமென, 8 வாரங்கள் கால அவகாசம் கேட்கப்பட்டதையடுத்து, ஜூலை 3 காலக்கெடுவாக நிர்ணயிக்கப்பட்டது.
இதையடுத்து இந்தச் சேவை இன்று முதல் அமல்படுத்த உள்ளதாக டிராய் அறிவித்துள்ளது.
மத்திய தொலை தொடர்பு துறை அமைச்சர் ரவிசங்கர் பிரசாத் இந்த ஒரு நாடு ஒரு எண் திட்டம் அமலுக்கு வந்தது மகிழ்ச்சியளிக்கிறது என தெரிவித்தார்.