பிரதமரின் அரசியல் செயலாளர் இது தொடர்பாக வெளியிட்டுள்ள அறிக்கையில், “வால் ஸ்ட்ரீட் ஜர்னல் மீது அவதூறு வழக்குப் பதிவு செய்யப் பிரதமர் முடிவு செய்துள்ளார். வால் ஸ்ட்ரீட் ஜர்னல், பிரதமர் மீது தெரிவித்துள்ள கருத்துகள் தவறான உள்நோக்கத்துடன் புனையப்பட்ட ஆதாரமற்ற குற்றச்சாட்டுகள். இது தொடர்பாக நாங்கள் சட்டப்பூர்வமான நடவடிக்கையை மேற்கொள்வோம்” என்று அவர் தெரிவித்துள்ளார்.
இதற்கு முன்னர் வால் ஸ்ட்ரீட் ஜர்னல் பத்திரிக்கை, 1எம்டிபி விவகாரத்தில், நஜிப்பின் கணக்கிற்குச் சுமார் 700 மில்லியன் டாலர்கள் பணம் பரிமாற்றம் செய்யப்பட்டதாகத் தெரிவித்திருந்தது குறிப்பிடத்தக்கது.
Comments