Home நாடு பழனிவேல் தரப்பினர் மஇகா உறுப்பினர்களைக் குழப்புகிறார்கள்: டாக்டர் சுப்ரா

பழனிவேல் தரப்பினர் மஇகா உறுப்பினர்களைக் குழப்புகிறார்கள்: டாக்டர் சுப்ரா

507
0
SHARE
Ad

கோலாலம்பூர், ஜூலை 6 – மஇகா உறுப்பினர்களை குழப்பும் நோக்கத்திலேயே டத்தோஸ்ரீ ஜி.பழனிவேல் தரப்பினர் சில நடவடிக்கைகளை மேற்கொண்டு வருவதாக டத்தோஸ்ரீ டாக்டர் சுப்ரமணியம் சாடியுள்ளார்.

டாக்டர் சுப்ரமணியத்தை மஇகா இடைக்காலத் தலைவராக அங்கீகரித்துச் சங்கப் பதிவகம் அறிவிப்பு வெளியிட்டது. சங்கப் பதிவகத்தின் முடிவை எதிர்க்கும் பழனிவேல் தரப்பினரின் மேல் முறையீட்டு மனு மீதான விசாரணை ஜூலை 13ஆம் தேதி நடைபெற உள்ளது.

CWC Press Conf-5 Julyநேற்றைய பத்திரிக்கையாளர் சந்திப்பில் டாக்டர் சுப்ராவும் மத்தியச் செயலவை உறுப்பினர்களும்

#TamilSchoolmychoice

இத்தகைய சூழ்நிலையில், மஇகா கிளைகளுக்கான வேட்புமனுத் தாக்கல் சங்கப் பதிவக உத்தரவுகளின்படி ஜூலை 10,11,12ஆம் தேதிகளில் நடைபெறும் என மஇகா தலைமையகம் அறிவித்துள்ளது.

ஆனால், இந்தச் சங்கப் பதிவக உத்தரவுகளுக்கு எதிராக வழக்கு தொடுத்துள்ள பழனிவேல் தரப்பினரும், போட்டியாக, கிளைத் தேர்தல்களுக்கான வேட்பு மனுவைத் தாக்கல் செய்யலாம் என அறிவித்துள்ளதாக டாக்டர் சுப்ரா கூறினார்.

“அவர்களின் (பழனிவேல் தரப்பு) செயல்பாடுகள் கட்சிக்கு எந்த வகையிலும் உதவாது. மாறாக மஇகா உறுப்பினர்களைக் குழப்பும். முதலில் 15ஆம் தேதிக்குள் வேட்பு மனுக்களைத் தாக்கல் செய்யலாம் என்று அறிவித்து, பின்னர் அத்தேதியை ஜூலை 9 என மாற்றியுள்ளனர். அங்கீகரிக்கப்பட்ட மத்தியச் செயலவைக் கிளைத் தேர்தல்களுக்கான வேட்பு மனுக்களை ஜூலை 10 முதல் 12ஆம் தேதிக்குள் தாக்கல் செய்யலாம் என நாங்கள் முடிவெடுத்திருப்பதாலேயே அத்தரப்பு இவ்வாறு அறிவித்துள்ளது,” என்று நேற்று காலை நடைபெற்ற 2009 மத்திய செயலவைக் கூட்டத்திற்குப் பின்னர் டாக்டர் சுப்ரா செய்தியாளர்களிடம் கூறினார்.

பழனிவேல் தரப்புக்குச் சட்டப்பூர்வ அங்கீகாரம் இல்லை என்று குறிப்பிட்ட அவர், மஇகாவினர் பழனிவேல் தரப்பு கூறுவதைச் செவிமடுக்க வேண்டாம் எனக் கிளைத் தலைவர்களைக் கேட்டுக் கொண்டார்.

கேபி சாமி, குமார் அம்மான் வருகை ஏன்?

“இன்று நடைபெற்ற 2009 மத்திய செயலவைக் கூட்டத்திற்குப் பழனிவேல் ஆதரவாளர்களான கே.பி.சாமி, ஜி.குமார் அம்மான் ஆகிய இருவரும் வந்திருந்தனர். பல்வேறு விசயங்கள் குறித்துத் தங்களின் கருத்துக்களை மத்தியச் செயலவைக் கூட்டத்தில் முன்வைத்தனர். இதே போன்று ஏனைய மத்தியச் செயலவை உறப்பினர்களும் அடுத்த கூட்டத்திற்கு வரவேண்டும்” என்றும் சுப்ரா கேட்டுக் கொண்டார்.

“கட்சியை இயல்பு நிலைக்குக் கொண்டு வருவதே 2009 மத்தியச் செயலவையின் நோக்கம். சங்கப் பதிவகத்தின் முடிவைப் பிரதமர் நஜிப்பும் அங்கீகரித்துள்ளார். டத்தோஸ்ரீ பழனிவேல் இனிமேலும் மஇகாவின் உறுப்பினர் அல்ல,” என்று டாக்டர் சுப்ரா மேலும் தெரிவித்தார்.