Home நாடு நஜிப் தொலைக்காட்சியில் தோன்றி விளக்கம் அளிக்க வேண்டும் – சைபுதீன் அப்துல்லா

நஜிப் தொலைக்காட்சியில் தோன்றி விளக்கம் அளிக்க வேண்டும் – சைபுதீன் அப்துல்லா

506
0
SHARE
Ad

Global Movement of Moderatesகோலாலம்பூர், ஜூலை 6 – 1 எம்டிபியுடன் தொடர்புடைய சர்ச்சைகள் மற்றும் குற்றச்சாட்டுகள் குறித்துப் பிரதமர் நஜிப் தொலைக்காட்சியில் தோன்றி உரிய விளக்கங்களை அளிக்க வேண்டும் என டத்தோ சைபுதீன் அப்துல்லா வலியுறுத்தி உள்ளார்.

இந்த விவகாரங்கள் தொடர்பில் நடந்தவை குறித்து நாட்டு மக்கள் தெளிவு பெற வேண்டியது அவசியம் என்றும் குளோபல் மூவ்மெண்ட் ஆஃப் மாட்ரேட்ஸ்-ன் தலைமைச் செயலதிகாரியான அவர் மேலும் கூறியுள்ளார்.

“மக்களின் மனோபாவம் அப்படிப்பட்டது. தற்போது பிரதமரைக் குறிவைத்துப் பேசப்படுகிறது. எனவே அவர் நாட்டு மக்களிடம் பேச வேண்டும். ஏனெனில் மலேசியர்கள் அவர்கள் சொல்வதைக் கவனிப்பர்,” என்றார் சைபுதீன்.

#TamilSchoolmychoice

பொதுக்கணக்குக் குழு நடத்தி வரும் விசாரணையும் தொலைக்காட்சியில் ஒளிபரப்பப்பட வேண்டும் என்று வலியுறுத்திய அவர், இதன் மூலம் வெளிப்படையான விசாரணை நடைபெறுவதை உறுதி செய்ய முடியும் என்றும், சந்தேகங்களை நிவர்த்தி செய்ய முடியும் என்றும் கூறினார்.

விசாரணை நடைபெறும் வேளையில் பிரதமர் நஜிப் தனது பதவிப் பொறுப்புகளிலிருந்து விலகி நிற்க வேண்டுமா என்று எழுப்பப்பட்ட கேள்விக்குப் பதில் அளித்த அவர், இதுகுறித்து அட்டர்னி ஜெனரலும் பேங்க் நேகாராவும் அறிக்கை வெளியிட வேண்டும் என்றார்.