Home நாடு வால் ஸ்டிரீட் ஜர்னல் மீது செவ்வாய்க்கிழமை நஜிப் வழக்கு தொடுக்கிறாரா?

வால் ஸ்டிரீட் ஜர்னல் மீது செவ்வாய்க்கிழமை நஜிப் வழக்கு தொடுக்கிறாரா?

695
0
SHARE
Ad

கோலாலம்பூர், ஜூலை 6 – najib3தனது  தனிப்பட்ட வங்கிக் கணக்குகளில் பல மில்லியன் ரிங்கிட் தொகை செலுத்தப்பட்டதாகச் செய்தி வெளியிட்ட வால் ஸ்டிரீட் ஜர்னல் பத்திரிகை மீது பிரதமர் நஜிப் செவ்வாய்க்கிழமை வழக்கு தொடர இருப்பதாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன.

பிரதமர் நஜிப் இம்முடிவு குறித்து அறிவிப்பார் என அவருக்கு நெருக்கமான வட்டாரங்கள் தெரிவித்ததாகவும் அவரது சார்பில் கோலாலம்பூரில் உள்ள அவரது வழக்கறிஞர்கள் வழக்கு தொடர்பான மனுவைத் தாக்கல் செய்வர் என்றும் ஸ்டார் ஆன்லைன் இணையதளம் செய்தி வெளியிட்டுள்ளது.

Wall Street Journalபிரதமரின் நற்பெயருக்குக் களங்கம் விளைவிக்கும் நோக்கில் வால் ஸ்டிரீட் ஜர்னல் செய்தி வெளியிட்டிருப்பதாகவும், அப்பத்திரிகை மீது சட்டப்படி நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் நஜிப்பின் அரசியல் செயலாளர் முகமட் கைருன் சனிக்கிழமை தெரிவித்திருந்தார்.

#TamilSchoolmychoice

இந்நிலையில் பிரதமர் நஜிப் சார்பில் வால் ஸ்டிரீட் ஜர்னல் மீது செவ்வாய்க்கிழமை வழக்கு தொடுக்கப்படும் எனத் தகவல் வெளியாகி உள்ளது.