Home உலகம் தாய்லாந்து மிருகக்காட்சி சாலையில் டிராம்கள் மோதி விபத்து – 5 பேர் பலி!

தாய்லாந்து மிருகக்காட்சி சாலையில் டிராம்கள் மோதி விபத்து – 5 பேர் பலி!

468
0
SHARE
Ad

tram4கோன் காயென், ஜூலை 6 – தாய்லாந்து மிருகக்காட்சி சாலையில் சுற்றுலாப் பயணிகளை ஏற்றிக் கொண்டு அந்தப் பகுதியை வலம் வந்து கொண்டிருந்த இரண்டு டிராம்கள் ஒன்றுடன் ஒன்று மோதிக் கொண்ட சம்பவத்தில் 2 வயது குழந்தை உட்பட 5 பேர் பலியாகினர், 50-க்கும் மேற்பட்டோர் படுகாயங்களுடன் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

tram2தாய்லாந்தின் வடகிழக்கு நகரமான கோன் காயெனின், காவ் சூயன் க்வாங் மிருகக் காட்சி சாலையில், அந்தப் பகுதியைச் சுற்றுலாப் பயணிகளுக்குச் சுற்றிக் காட்டும் இரண்டு டிராம்கள் ஒன்றுடன் ஒன்று மோதிக் கொண்டன.

முன்னாள் சென்று கொண்டிருந்த டிராம் மீது பின்னால் வந்து கொண்டிருந்த டிராம் ஓட்டுனரின் கட்டுப்பாட்டை இழந்து மோதியது. இதனால் இரு டிராம்களும் பள்ளத்தில் விழுந்தன. இதில் டிராமில் பயணம் செய்த 50-க்கும் மேற்பட்ட பயணிகள் படுகாயமடைந்தனர். 2 வயது குழந்தை ஒன்று சம்பவ இடத்தில் உடல் நசுங்கி இறந்தது. 4 பேர் மருத்துவமனைக்குச் செல்லும் வழியில் பலியாகினர்.

#TamilSchoolmychoice

tram1இந்தச் சம்பவம் தொடர்பாக  கோன் காயென் காவல் துறை விசாரணை நடத்தி வருவதாகக் கூறப்படுகிறது. இறந்தவர்கள் பற்றிய விவரங்கள் இன்னும் வெளியாகாததால், அதில் வெளிநாட்டுப் பயணிகள் யாரேனும் இருந்தனரா? என்பது தெரியவில்லை.