கோலாலம்பூர், ஜூலை 6 – அம்பாங் தொகுதியைச் சேர்ந்த கிளைத் தலைவர்களில் ஒருவரான டத்தோ என்.முனியாண்டி, கோலாலம்பூர் உயர்நீதிமன்றத்தில் புதிய வழக்கொன்றைத் தொடுத்திருந்தார். அந்த வழக்கின்படி, தான் சங்கப் பதிவகத்தின் அதிகாரபூர்வ மஇகா பொறுப்பாளர்கள் பட்டியலைப் பெற்றதாகவும் அதில் இடைக்காலத் தேசியத் தலைவராக டத்தோஸ்ரீ டாக்டர் எஸ்.சுப்ரமணியம் பெயர் குறிப்பிடப்பட்டிருப்பதாகவும், இதனால் இனி பழனிவேல் தன்னை மஇகாவின் தேசியத் தலைவராக அழைத்துக் கொள்ளக் கூடாது என்றும், டத்தோ முனியாண்டி ஒரு சார்பு வழக்கை (Ex Parte) நீதிமன்றத்தில் தொடுத்திருந்தார்.
இன்று காலை விசாரணைக்கு வந்த இந்த வழக்கில், இனி பழனிவேல் தன்னை மஇகா தேசியத் தலைவராகப் பெயர் குறிப்பிடக் கூடாது எனத் தடையுத்தரவு வழங்கி நீதிபதி தீர்ப்பு வழங்கியிருப்பதாக நம்பப்படுகின்றது.
இது குறித்த உறுதிப்படுத்தப்பட்ட அதிகாரப்பூர்வத் தகவல் இன்னும் சில மணி நேரங்களில் வெளியிடப்படும் என எதிர்பார்க்கப்படுகின்றது.
(மேலும் செய்திகள் தொடரும்)