Home நாடு நஜிப் மீதான குற்றச்சாட்டு: அவசர நாடாளுமன்றக் கூட்டத்தைக் கூட்ட ஜசெக, பிகேஆர் வலியுறுத்து!

நஜிப் மீதான குற்றச்சாட்டு: அவசர நாடாளுமன்றக் கூட்டத்தைக் கூட்ட ஜசெக, பிகேஆர் வலியுறுத்து!

563
0
SHARE
Ad

Wan-Azizah-Wan-Ismailகோலாலம்பூர், ஜூலை 6 – 1எம்டிபி விவகாரத்தில் பிரதமர் டத்தோஸ்ரீ நஜிப் துன் ரசாக் மீது வால் ஸ்ட்ரீட் ஜார்னல் செய்தி நிறுவனம் சுமத்தியுள்ள குற்றச்சாட்டு குறித்து விவாதிக்க நாடாளுமன்றத்தில் அவசரக் கூட்டம் கூட்டப்பட வேண்டும் என ஜசெக மற்றும் பிகேஆர் வலியுறுத்தியுள்ளது.

நாளை மதியம் நடைபெறவுள்ள இந்தச் சிறப்பு நாடாளுமன்றக் கூட்டத்தில் கட்சி வேறுபாடுகளைக் கடந்து அனைத்து நாடாளுமன்ற உறுப்பினர்கள் மற்றும் அரசு சாரா இயக்கங்கள் கலந்து கொள்ள வேண்டும் என எதிர்கட்சித் தலைவர் டத்தோஸ்ரீ டாக்டர் வான் அசிசா வான் இஸ்மாயில் தெரிவித்துள்ளார்.

மேலும் இது குறித்து வான் அசிசா வெளியிட்டுள்ள அறிக்கையில், “வால் ஸ்ட்ரீட் ஜார்னல் சுமத்தியுள்ள கடுமையான குற்றச்சாட்டில் சில அடிப்படை ஆதாரங்கள் இருப்பதாகக் தெரிகின்றது. இப்போது, அட்டர்னி ஜெனரல் (சட்டத்துறைத் தலைவர்) டான்ஸ்ரீ அப்துல் கனி பட்டேலும், 1 எம்.டி.பி நிறுவனத்தின் பல மில்லியன் ரிங்கிட் தொகை பிரதமர் நஜிப்பின் வங்கிக் கணக்குகளில் செலுத்தப்பட்டதாக எழுந்துள்ள புகார் குறித்துப் பல்முனை முகைமைகளின் ஒருங்கிணைந்த சிறப்பு நடவடிக்கைக் குழு விசாரணை நடத்தி வருகிறது எனத் தெரிவித்துள்ளார். இது குறித்து இன்னும் அரசாங்க முகைமைகளிடமிருந்து முழு அறிக்கை தயாராகவில்லை. எனவே மக்கள் எதற்கும் தயார் நிலையில் இருக்க வேண்டும்” என்று வான் அசிசா தனது அறிக்கையில் குறிப்பிட்டுள்ளார்.

#TamilSchoolmychoice

Lim-Kit-Siang1ஜசெக ஆலோசகர் லிம் கிட் சியாங் இது குறித்து வெளியிட்டுள்ள கருத்தில், இந்த விவகாரத்தில் அட்டர்னி ஜெனரல் தலையிட்டு அரசாங்கத் தரப்பு ஆவணங்களை மறுஆய்வு செய்ய உறுதிப்படுத்தியுள்ளது, பிரதமரின் மீதான குற்றச்சாட்டின் தன்மையை மேலும் துரிதப்படுத்தியுள்ளது.” என்று தெரிவித்துள்ளார்.

இதனிடையே, நாளை மதியம் நடைபெறவுள்ள முற்போக்கான நாடாளுமன்ற உறுப்பினர்களின் கூட்டத்தில் பிரதமர் நஜிப் துன் ரசாக் அவசியம் கலந்து கொள்ள வேண்டும் என்று குறிப்பிட்டுள்ள லிம் கிட் சியாங், தனது பெயரில் ஏற்பட்டுள்ள களங்கத்தைப் போக்கிக் கொள்ள நஜிப்புக்கு இது ஒரு சிறந்த வாய்ப்பு என்றும் தெரிவித்துள்ளார்.