Home இந்தியா இந்தியப் பிரதமர் நரேந்திர மோடி இன்று வெளிநாடுகளுக்குப் பயணம்  

இந்தியப் பிரதமர் நரேந்திர மோடி இன்று வெளிநாடுகளுக்குப் பயணம்  

404
0
SHARE
Ad

modi-air-india-one-apr-13-pti_650x400_51428910383புதுடில்லி, ஜூலை 6- பிரதமர் நரேந்திர மோடி  உஸ்பெகிஸ்தான், கஜகஸ்தான், துர்க்மெனிஸ்தான், கிர்கிஸ்தான், தஜிகிஸ்தான் ஆகிய 5 மத்திய ஆசிய நாடுகளுக்கும், ரஷியாவிற்கும் ஒரு வாரம் சுற்றுப்பயணம் மேற்கொள்கிறார். அங்கு முக்கிய ஒப்பந்தங்கள் கையெழுத்தாகின்றன.

பிரதமர் மோடி கடந்த ஓராண்டில் அமெரிக்கா, சீனா, பிரேசில், பிரான்ஸ், ஜெர்மனி, ஆஸ்திரேலியா, ஜப்பான், தென்கொரியா உள்ளிட்ட உலகின் 18 நாடுகளுக்குப் பயணம் மேற்கொண்டார். அப்போது அந்த நாடுகளுடன் பல முக்கிய ஒப்பந்தங்களும் கையெழுத்தாயின.

இம்முறை 5 மத்திய ஆசிய நாடுகளுக்கும் ரஷியாவிற்கும் பயணம் மேற்கொள்கிறார். இந்த நாடுகள் அனைத்துமே இந்தியாவின் பாதுகாப்புப் பிராந்திய வட்டத்துடன் தொடர்பு கொண்டவை ஆகும்.

#TamilSchoolmychoice

ஒவ்வொரு நாட்டிலும் பிரதமர் 24 மணி நேரத்துக்கும் குறைவாகவே தங்கும் வகையில் அவருடைய பயணத் திட்டம் அமைக்கப்பட்டிருக்கிறது.

முதற்கட்டமாக, டில்லியிலிருந்து இன்று புறப்பட்டு உஸ்பெகிஸ்தான் நாட்டிற்குச் செல்கிறார்.

உஸ்பெகிஸ்தானின் தாஷ்கண்ட் நகரில் மோடி இந்தியக் கலாசார அறிஞர்களையும் இந்தி பயிலும் மாணவர்களையும் சந்தித்துப் பேசுகிறார்.

அடுத்து கஜகஸ்தான் செல்லும் அவர், அங்கு நஷர்பையேவ் பல்கலைக்கழக மாணவர்களிடையே உரையாற்றுகிறார். இந்தியா- கஜகஸ்தான் திறன் மேம்பாட்டு மையத்தையும் தொடங்கி வைக்கிறார்.

துர்க்மெனிஸ்தானில் பாரம்பரிய மருத்துவம் மற்றும் யோகா மையத்தைத் தொடங்கி வைக்கிறார்.

கிர்கிஸ்தான் நாட்டில் இணையதள முறையில் இந்தியாவுடன் மருத்துவச் சிகிச்சைகளைப் பரிமாறிக் கொள்ளும் இ–ஹெல்த் இணைப்புத் திட்டத்தையும் அவர் தொடங்கிவைக்கிறார்.

தஜிகிஸ்தான் அதிபர் எமோமாலி ரஹ்மோனுடன் பரஸ்பர நலன் குறித்து விரிவான பேச்சுவார்த்தைகளை மோடி மேற்கொள்கிறார்.

பிரதமரின் இந்தப் பயணத்தின்போது மத்திய ஆசிய நாடுகள் அனைத்திலும், ராணுவம், பயிற்சி அளித்தல், திறன்வளர்த்தல், கலாச்சாரம், சுற்றுலா போன்ற துறைகளில் பல முக்கிய ஒப்பந்தங்கள் கையெழுத்தாகின்றன.

மேலும், அரசியல் மற்றும் பொருளாதார ரீதியான பிரச்சினைகளில் ஒத்துழைத்துச் செயல்படுவது குறித்த பேச்சுவார்த்தையும் இந்தப் பயணத்தில் முக்கியத்துவம் பெறும்.