Home தொழில் நுட்பம் லட்சக்கணக்கானோரைக் காக்க வைத்த ‘மோஸ்ட் எக்ஸ்குளூசிவ் வெப்சைட்’!

லட்சக்கணக்கானோரைக் காக்க வைத்த ‘மோஸ்ட் எக்ஸ்குளூசிவ் வெப்சைட்’!

747
0
SHARE
Ad

mostexclusivewebsiteகோலாலம்பூர், ஜூலை 6 – பொதுவாக வரிசையில் காத்திருப்பது யாருக்குமே பிடிக்காத ஒன்று. ஆனால் ஒரு இணையதளத்தைப் பார்ப்பதற்காக லட்சக்கணக்கில் பயனர்கள் வரிசையில் காத்திருக்கிறார்கள் என்ற செய்தி ஆச்சரியத்தை ஏற்படுத்துகிறது. அப்படி ஒரு இணைய தளம் இருக்கிறதா? அந்த இணையதளத்தின் பெயர் என்ன? என்று கேட்கத் தோன்றும். இதற்கான பதில், ஆம் உண்மை தான், அந்த இணைய தளத்தின் பெயர் ‘மோஸ்ட் எக்ஸ்குளூசிவ் வெப்சைட்’ (Most Exclusive Website).

அமெரிக்காவின் ஜஸ்டின் போலே என்ற இணையதள வடிவமைப்பாளர், சாதாரணமாக வடிவமைத்த இணையதளம் ஒன்று, இன்று பயனர்கள் மத்தியில் அதிரி புதிரியான வரவேற்பைப் பெற்றுள்ளது.

இந்த இணைய தளத்தின் சிறப்பே, ஒரு சமயத்தில் ஒருவர் மட்டும் தான் அதனைப் பார்க்க முடியும் என்பதாகும். அதுவும் ஒரு நிமிடம் மட்டுமே பார்க்க முடியும். அது எப்படி, திறந்தவெளித் தன்மை கொண்ட இணையத்தில் அது சாத்தியமாகும் என்ற கேள்வி உங்களுக்குள் எழலாம். ஆனால் அதனைத் தனது இணைய வடிவமைப்பின் மூலம் சாத்தியமாக்கி இருக்கிறார் இந்த அமெரிக்கர்.

#TamilSchoolmychoice

இப்படித் தனித்தன்மை கொண்ட இணையதளமாக இது வடிவமைக்கப்பட்டதனால், அதன் பெயரையும் மோஸ்ட் எக்ஸ்குளூசிவ் வெப்சைட் என்று அறிவித்தார். அனுமதிச் சீட்டின் மூலம் வரிசையில் காத்திருந்து இதுவரை  2,65,000 பேருக்கு மேல் இந்தத் தளத்தைப் பயன்படுத்தி உள்ளனர்.

இன்னும்  வரிசையில் ஆயிரக்கணக்கானோர் காத்திருக்கின்றனர். இப்படித் தனிச்சிறப்பைக் கொண்ட இந்த இணையதளத்தில் என்ன தான் இருக்கிறது? என்று நீங்களும் தெரிந்து கொள்ள விரும்பினால் கீழே உள்ள தொடர்பைப் பயன்படுத்துங்கள். ஆனால் பொறுமையுடன்..

http://mostexclusivewebsite.com/