Home இந்தியா ஆர்.கே.நகர் இடைத்தேர்தலில் முறைகேடு: உயர்நீதிமன்றத்திற்கு விஜயகாந்த் கோரிக்கை!

ஆர்.கே.நகர் இடைத்தேர்தலில் முறைகேடு: உயர்நீதிமன்றத்திற்கு விஜயகாந்த் கோரிக்கை!

564
0
SHARE
Ad

Vijayakanth_hungerசென்னை,ஜூலை 6- ‘தேர்தல் முறைகேட்டிற்கு முடிவு கட்ட, உயர் நீதிமன்றம் தானாகவே முன்வந்து நடவடிக்கை எடுக்க வேண்டும் எனத் தே.மு.தி.க., தலைவர் விஜயகாந்த் கோரிக்கை வைத்துள்ளார்.

இதுகுறித்து அவர் வெளியிட்டிருக்கும் அறிக்கையாவது:

கடந்த ஓராண்டு காலமாக , 40 ஆண்டுகளுக்கு முன் கொண்டு வரப்பட்ட, அவசர நிலை குறித்து நாடு முழுவதும் பேசப்படுகிறது.

#TamilSchoolmychoice

அப்போதைய பிரதமர் இந்திராவிற்கு ஆதரவாக, அரசு அதிகாரிகள் தேர்தல் பணியாற்றியதாகத் தெரிவிக்கப்பட்ட குற்றச்சாட்டு நிரூபிக்கப்பட்டு, அவர் நாடாளுமன்ற உறுப்பினராக வெற்றி பெற்றது செல்லாது என  நீதிமன்றம் தீர்ப்பளித்ததால், அவசர நிலை பிரகடனம் செய்யப்பட்டது.

அதேபோன்ற குற்றச்சாட்டு, முதல்வர் ஜெயலலிதா மீதும், ஆர்.கே.நகர் தொகுதி இடைத்தேர்தலில் எழுந்துள்ளது.

இடைத்தேர்தலில், முறைகேடுகள் பல செய்து, போலியான வெற்றி பெற்றுள்ளார். இது, அ.தி.மு.க.,வினர் மனசாட்சிக்கே தெரியும்.

நாட்டில், எங்கும் நடக்காத வகையில் அராஜகம், அத்துமீறல், முறைகேடு என  இடைத்தேர்தல் நடந்து முடிந்துள்ளது.

இதுகுறித்துத் தேர்தல் ஆணையம் நடவடிக்கை எடுக்குமா அல்லது வழக்கம் போல வாய் மூடி மெளனமாக இருக்குமா என்று தெரியவில்லை.

தற்போது, அரசு செய்யும் தவறுகளை, நீதிபதிகள் சுட்டிக்காட்டிக் கண்டித்து வருகின்றனர். அதனால், மக்களுக்கு எதிரான நடவடிக்கைகளை ஓரளவு கட்டுப்படுத்த முடிகிறது.

எனவே, இந்தத் தேர்தல் முறைகேட்டிற்கு முடிவு கட்ட, உயர் நீதிமன்றம் தானாகவே முன்வந்து நடவடிக்கை எடுக்க வேண்டும் எனத் தமிழக மக்கள் எதிர்பார்க்கின்றனர்” என்று விஜயகாந்த் அந்த அறிக்கையில்  கூறியுள்ளார்.