Home கலை உலகம் தனது உதவி இயக்குநர் கார்த்தியை இயக்குகிறார் மணிரத்னம்!  

தனது உதவி இயக்குநர் கார்த்தியை இயக்குகிறார் மணிரத்னம்!  

682
0
SHARE
Ad

maniratnam_01சென்னை, ஜூலை 6- ‘ஓகே கண்மணி’ படத்திற்குப் பிறகு மணிரத்னம் இயக்கவிருக்கும் படம் எது? கதாநாயகன் யார்? என்கிற எதிர்பார்ப்பு இரசிகர்களிடையே இருந்து வருகிறது.

ஆனால்,அதற்கான எந்தத் தகவலும் இதுவரை வெளியாகாமல் இருந்தது.

தற்போது, மணிரத்னம் தனது அடுத்த படத்தை முடிவு செய்துவிட்டதாகவும், அதில்  கார்த்தி கதாநாயகனாக நடிக்கவிருப்பதாகவும் தகவல் வெளியாகியுள்ளது.

#TamilSchoolmychoice

சமீபத்தில் கார்த்தியும் மணிரத்னமும் சந்தித்துப் படத்தைப் பற்றிக் கலந்து ஆலோசித்திருக்கிறார்கள்.

படத்திற்கான கதை  முடிவாகி, திரைக்கதை எழுதும் பணி நடந்து வருகிறது.

படப்பிடிப்பு செப்டம்பர் மாதம் தொடங்கவிருக்கிறது.

கார்த்தி, முதலில் மணிரத்னத்தின் உதவி இயக்குநராகவே தன்னுடைய திரைப்பயணத்தைத் தொடங்கினார். சூர்யா, மாதவன், சித்தார்த் நடித்த ‘ஆயுத எழுத்து’ படத்தில் மணிரத்னத்திடம் உதவி இயக்குநராகப் பணிபுரிந்தார்,

அப்போதே ஆயுதஎழுத்து படத்தில் சித்தார்த் நடித்த வேடத்தில் கார்த்தியைத்தான் நடிக்கச் சொன்னாராம் மணிரத்னம்.

அப்போது, நடிப்பதில் விருப்பம் இல்லை என மறுத்த கார்த்தி, இவ்வளவு ஆண்டுகள் கழித்து தன்னுடைய குருவின் இயக்கத்திலேயே தனிக் கதாநாயகனாக நடிக்கிறார் என்பதைக் காலத்தின் கட்டாயம் என்று தான் சொல்ல வேண்டும்.

இப்படத்தில், மணிரத்னத்தின் வழக்கமான தொழில்நுட்பக் கலைஞர்கள் பணியாற்றவிருக்கிறார்கள்.

படத்தின் தலைப்பு, நடிகர் நடிகைகள் பற்றிய விவரம் பின்னர் வெளியடப்படும்