அந்த வரிசையில் இப்போது அம்மா திரையரங்கம் வரவிருக்கிறது. சென்னை மாநகராட்சி மன்றக் கூட்டத்தில் இதற்கான தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது.
சென்னையில் ராமாபுரம், தியாகராயர் நகர், கோட்டூர்புரம் உள்பட 6 இடங்களில் திரையரங்கங்கள் கட்டப்படவுள்ளன.
அம்மா திரையரங்கங்கள் கட்டுவதற்கான இடங்களும் தேர்வு செய்யப்பட்டுள்ளன.
அம்மா திரையரங்கம் கட்டுவதற்கான இடம் தேர்வு பற்றி மாநகராட்சி தீர்மானத்தில் தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதுபற்றிய விரிவான செய்திகள் பின்னர் வெளியிடப்படும் என்று மாநகராட்சி வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
Comments