Home நாடு 1எம்டிபி விவகாரம்: 6 வங்கிக் கணக்குகள் முடக்கம் – அதில் 3 பிரதமருடையது எனத் தகவல்!

1எம்டிபி விவகாரம்: 6 வங்கிக் கணக்குகள் முடக்கம் – அதில் 3 பிரதமருடையது எனத் தகவல்!

490
0
SHARE
Ad

Najib 1MDBகோலாலம்பூர், ஜூலை 7 – 1எம்டிபி விவகாரத்தில் பிரதமரின் தனிப்பட்ட வங்கிக் கணக்கிற்கு 2.6 பில்லியன் நிதிப் பரிமாற்றம் செய்யப்பட்டுள்ளதாகக் கூறப்படும் குற்றச்சாட்டுகளை விசாரணை செய்து வரும் சிறப்பு விசாரணைக் குழு, இவ்விவகாரத்தில் தொடர்புடைய 6 வங்கிக் கணக்குகளை முடக்கியுள்ளதாக அறிவித்துள்ளது.

எனினும், அந்த வங்கிக் கணக்குகள் யாருடையது என்பது குறித்து தகவல்களை வெளியிட விசாரணைக்குழு மறுத்துள்ளது. அந்த 6 வங்கிக் கணக்குகளின் 3 பிரதமர் நஜிப்புடையது என மலேசியாகினி தெரிவித்துள்ளது.

“ஆமாம், அதில் 3 கணக்குகள் நஜிப்புடையது தான். நாங்கள் மிகக் கவனமாக இந்த விவகாரத்தைக் கையாண்டு வருகின்றோம்” என்று அந்த விசாரணைக் குழுவிற்கு மிகவும் தொடர்புடைய இடத்தில் இருந்து தங்களுக்குத் தகவல் கிடைத்துள்ளதாக மலேசியாகினி குறிப்பிட்டுள்ளது.

#TamilSchoolmychoice

பேங்க் நெகாரா, காவல்துறை, சட்டத்துறைக் குழு, மலேசிய ஊழல் தடுப்பு ஆணையம் ஆகியவை கடந்த 4 நாட்களாக நடத்திய விசாரணையின் முடிவில் தற்போது  6 கணக்குகள் முடக்கப்பட்டுள்ளன.