Home நாடு கண்ணியம் மிகுந்தவராக விடுப்பில் செல்ல வேண்டும் – நஜிப்புக்கு எதிர்க்கட்சிகள் வலியுறுத்து

கண்ணியம் மிகுந்தவராக விடுப்பில் செல்ல வேண்டும் – நஜிப்புக்கு எதிர்க்கட்சிகள் வலியுறுத்து

569
0
SHARE
Ad

najib-ambiga-protest-burgerகோலாலம்பூர், ஜூலை 8 – 1எம்டிபி குறித்து விசாரணை நடைபெறும் வேளையில் கண்ணியம் மிகுந்தவராகப் பிரதமர் நஜிப் விடுப்பில் செல்ல வேண்டும் என்றும் இந்த விசாரணை முடிந்த ஓராண்டுக்குள் பொதுத் தேர்தல் நடத்தப்பட வேண்டும் என்றும் டத்தோ அம்பிகா சீனிவாசன் வலியுறுத்தியுள்ளார்.

நேற்று செவ்வாய்க்கிழமை எதிர்க்கட்சித் தலைவர்கள் மற்றும் அரசு சார்பற்ற இயக்கங்கள் பங்கேற்ற சந்திப்பில் பேசிய போதே அவர் இவ்வாறு குறிப்பிட்டார்.

“பிரதமர் விடுப்பில் செல்லும் பட்சத்தில் காபந்து அரசு அமைக்கப்படலாம். மேலும் ஓராண்டுக்குள் தேர்தல் நடத்தப்படும் என்றும் உறுதியளிக்க வேண்டும்,” என்றார் அம்பிகா.

#TamilSchoolmychoice

அவரது இக்கருத்தை ஜசெக பொதுச் செயலாளர் லிம் குவான் யெங்கும் ஆதரித்தார்.
“அந்தத் தேர்தலில் எதிர்க்கட்சிகள் வெற்றி பெறாமல் போகலாம். எனினும் குறைந்த பட்சமாக ஊழல் குற்றச்சாட்டுகள் அற்ற அரசாங்கம் அமையும்,” என்றார் லிம்.

விசாரணை நடைபெறும் வேளையில் பிரதமர் நஜிப் கண்ணியத் தன்மையுடன் விடுப்பில் செல்ல வேண்டும் என எதிர்க்கட்சித் தலைவர் வான் அசிசாவும் வலியுறுத்தினார்.

“சுதந்திரமான விசாரணை ஆணையம் அமைக்கப்பட்டு அது தன் விசாரணையை முடிக்கப் பிரதமர் அனுமதிக்க வேண்டும் எனக் கேட்டுக் கொள்கிறோம். தற்போது நடைபெறும் விசாரணை குறித்து நாடாளுமன்றத்தின் சிறப்புக் கூட்டத்திற்கு வந்து அட்டர்னி ஜெனரல் டான்ஷ்ரீ அப்துல் கனியும், பேங்க் நெகாரா ஆளுநரும் விளக்கம் அளிக்க வேண்டும்,” என வான் அசிசா மேலும் கேட்டுக் கொண்டுள்ளார்.