Home நாடு பினாம்பிங்கில் கால்வாயில் சுயநினைவின்றி நிர்வாணமாகக் கிடந்த பெண் மீட்பு!

பினாம்பிங்கில் கால்வாயில் சுயநினைவின்றி நிர்வாணமாகக் கிடந்த பெண் மீட்பு!

554
0
SHARE
Ad

kksnaked1கோத்தா கினபாலு, ஜூலை 9 – பினாம்பாங் என்ற இடத்தில், கடல் உணவுக் கடை ஒன்றின் அருகில், இன்று மதியம் 20 வயது மதிக்கத்தக்க பெண் ஒருவர், கால்வாயில் சுயநினைவின்றி நிர்வாணமாகக் கிடந்ததை அப்பகுதியில் சென்றோர் பார்த்து, உடனடியாகக் காவல்துறைக்குத் தகவல் தெரிவித்தனர்.

இப்பெண்ணின் நிலை குறித்துப் புகைப்படத்துடன் இன்று மதியம் நட்பு ஊடகங்களில் தகவல் பரவத் தொடங்கியது. அத்தகவலின் படி, அப்பெண் கற்பழிக்கப்பட்டிருப்பதாகவும், முகத்தில் கடுமையான காயங்கள் இருப்பதாகவும் கூறப்பட்டிருந்தது.

இந்நிலையில், அப்பெண்ணை மீட்ட காவல்துறை, அவரை உடனடியாக மருத்துவமனையில் சேர்த்துள்ளது.

#TamilSchoolmychoice

இது குறித்துப் பினாம்பாங் மாவட்டக் காவல்துறைத் தலைமைத் துணைத் தலைவர் ரோஸ்லி ஹோண்டென், அப்பெண்ணிடம் வாக்குமூலம் பெறுவதற்கு முன் அவருக்குத் தக்க சிகிச்சைகள் வழங்கப்பட வேண்டும் என்று தெரிவித்துள்ளார்.