Home உலகம் “அமெரிக்கத் தலைமையை இந்தியா விரும்பவில்லை” – போபி ஜிண்டால்

“அமெரிக்கத் தலைமையை இந்தியா விரும்பவில்லை” – போபி ஜிண்டால்

542
0
SHARE
Ad

bobbyவாஷிங்டன், ஜூலை 9 – ஒபாமாவின் பொறுப்பில்லாத வெளியுறவுக் கொள்கைகள் மற்றும் நிர்வாகத்தால் இந்தியா, அமெரிக்காவின் தலைமையை விரும்பவில்லை. மாறாக நம்மீது அவநம்பிக்கை தான் கொண்டிருக்கிறது” என லூசியானா மாகாண ஆளுநரும், குடியரசுக் கட்சியின் அதிபர் வேட்பாளர்களுள் ஒருவருமான போபி ஜிண்டால் தெரிவித்துள்ளார்.

அதிபர் வேட்பாளருக்கான அறிவிப்பு வெளியானது முதலே ஒபாமாவின் ஆட்சிமுறைகளைப் பற்றிக் கடுமையாக விமர்சித்து வரும் ஜிண்டால், சமீபத்தில் பிரபல செய்தி நிறுவனம் ஒன்றிற்காக வெளியிட்டுள்ள அறிக்கையில், “அமெரிக்காவுடன் நீண்ட காலமாகத் தொடர்பு வைத்திருக்கும் ஜப்பான், தென் கொரியா மற்றும் தைவான் ஆகிய நாடுகளுடன் மட்டுமல்லாமல் நமது அணிசேரா நாடுகளான இந்தியா, வியட்நாம் ஆகிய நாடுகளுடனும் நாம் நெருக்கம் காட்ட வேண்டும். ஆனால், அமெரிக்காவின் தலைமையை ஏற்க மேற்கூறிய நாடுகள் தயாராக இல்லை. மாறாக நம்மீது அவநம்பிக்கை தான் கொண்டிருக்கின்றன”

“அதிபர் ஒபாமாவிற்கு யார் எதிரிகள் என்றே தெரியாது. உலகம் முழுவதும் பரவி வரும் இஸ்லாமியத் தீவிரவாதம் என்ன என்பது கூட அவருக்குத் தெரியவில்லை. அவருக்கு அமெரிக்கர்களை மட்டுமே விமர்சிக்கத் தெரியும். என்னைப் பொருத்தவரை அமெரிக்கா தனித்துவமான நாடு. ஆனால் நாம் தற்போது அந்தத் தனித்துவத்தை இழந்து வருகிறோம்” என்று தெரிவித்துள்ளார்.

#TamilSchoolmychoice

மேலும் அவர், தன்னைச் செய்தி நிறுவனங்கள் இந்திய-அமெரிக்கர் என்று வேறுபடுத்துவதை விரும்பவில்லை என்றும், பத்திரிக்கைகள் தேவையில்லாமல் இன வேறுபாட்டை ஏற்படுத்தும் வகையில் அது போன்று எழுதி வருவதாகவும் தெரிவித்துள்ளார்.