Home உலகம் “நான் அதிபரானால்..” – போபி ஜிண்டாலின் பேச்சால் பரபரப்பு!

“நான் அதிபரானால்..” – போபி ஜிண்டாலின் பேச்சால் பரபரப்பு!

734
0
SHARE
Ad

bobbyவாஷிங்டன், ஆகஸ்ட் 9 – “நான் அதிபரானால், உச்ச நீதிமன்ற நீதிபதிகள் ஒன்பது பேரில் ஆறு பேரை நீக்கி விடுவேன்” என அமெரிக்க அதிபர் வேட்பாளர் போபி ஜிண்டால் கூறியுள்ளது அங்கு பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

இந்திய வம்சாவளியைச் சேர்ந்த போபி ஜிண்டால், ஏற்கனவே ஒருமுறை தன்னை இந்திய-அமெரிக்கர் என்று அழைப்பதை விரும்பவில்லை  என்று கூறி பரபரப்பை ஏற்படுத்தினார். இந்நிலையில், 2016-ம் ஆண்டு நவம்பர் மாதம் நடைபெற இருக்கும் அதிபர் தேர்தலுக்குக்கான வேட்பாளர்களின் விவாத மேடையில், “ஓரினச்சேர்க்கையாளர்களின் திருமணத்திற்கும், ஒபாமா கேர் சுகாதார காப்பீட்டு மானியத்திற்கும், உச்ச நீதிமன்றம் அனுமதி வழங்கியுள்ளது. இது போன்ற நடவடிக்கைகளால் உச்ச நீதிமன்றத்தை மூடுவதை விட, அதில் உள்ள ஒன்பது நீதிபதிகளில், ஆறு பேரை நீக்கி விடலாம்.”

“குறிப்பாக, முன்னாள் அதிபர்கள் ரொனால்டு ரீகன், ஜார்ஜ் புஷ் ஆகியோர் நியமித்து, தற்போது உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதிகளாக இருக்கும் ஜான் ராபர்ட்ஸ் ஜூனியர் மற்றும் அந்தோணி கென்னடி ஆகியோர் உள்ளிட்ட ஆறு நீதிபதிகளை நீக்க வேண்டும்” என்று கூறியுள்ளார்.

#TamilSchoolmychoice

ஓரினச்சேர்க்கையாளர்களின் திருமணத்திற்கு அங்கீகாரம் வழங்கப்பட்டதற்கும், ஒபாமா கேர் திட்டத்திற்கும் ஆரம்பம் முதலே கடுமையான எதிர்ப்புகளை தெரிவித்து வந்த ஜிண்டால், இதற்காக ஒபாமாவையும் தொடர்ந்து விமர்சித்து வந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.