கோலாலம்பூர், ஜூலை 10 – ஐபோன் 6 வெளியாகி ஏறக்குறைய ஒருவருட கால ஆகிவிட்டது. ஆனாலும், அதன் தாக்கம் இன்னும் குறைந்த பாடில்லை. ஆப்பிள் நிறுவனமும் ஐபோன் 6 பற்றிய விளம்பரங்களையும் குறைத்தபாடில்லை.
சமீபத்தில் ஐபோன் 6-ஆல் படம்பிக்கப்பட்ட 15 நொடிக் காட்சிகளை தனது இணைய தளத்தில் வெளியிட்டு, தொழில்முறை கேமராக்களுக்கு தங்கள் ஐபோன் 6-ன் கேமரா தொழில்நுட்பம் எந்தவகையிலும் குறைந்தது இல்லை என பிரகடனப்படுத்தி உள்ளது.
அந்த காணொளிகளில் குறிப்பிட்ட ஒரு காட்சி நீருக்கு அடியிலும், மற்றொன்று ஸ்லொ மோஷன் மற்றும் ‘டைம் லேப்ஸ்’ (Time Lapse) முறையிலும் படம் பிடிக்கப்பட்டு ஆச்சரியத்தை ஏற்படுத்துகிறது. இதில் குறிப்பிடப்பட வேண்டிய மற்றொரு விஷயம் என்னவென்றால், ஐபோன் 6 தொடர்பாக ஆப்பிள் வெளியிடும் அத்தனை காணொளிகளும், ஐபோன் 6 பயனர்களால் படம் பிடிக்கப்பட்டது என்பதாகும்.
ஐபோன் 6 படம்பிடித்துள்ள காட்சிகளைக் கீழே காண்க:
https://www.youtube.com/watch?v=2yvIl1Js3i0
கடலில் தோன்றும் அலைகளை டைம் லேப்ஸ் முறையில் மிக அழகாக படம் பிடித்துள்ளனர். ஐபோன் 6-ல் இந்த தொழில்நுட்பத்தை இவ்வளவு நேர்த்தியாக எடுக்க முடியுமா? என்பது இந்த காணொளி வந்த பிறகே பலருக்கு தெரியவந்துள்ளது.
https://www.youtube.com/watch?v=8aAab7gxbEg
உப்புப் பாளம் அருகே காரில் பயணிக்கும் ஒருவர் ஐபோன் 6 மூலம் எடுத்த காட்சி. வேகத்திற்கு ஏற்ப பாளத்தில் தோன்றும் அலைகளைக் கவனியுங்கள், கண்டிப்பாக தொழில்முறை கேமராக்களுக்கு, ஐபோன் 6 சளைத்தது இல்லை என்ற தோன்றும்.
https://www.youtube.com/watch?v=WAu9VxuE29A
இந்த ரயில் காணொளியும் ஸ்லொ மோஷன் தொழில்நுட்ப முறையில் எடுக்கப்பட்டது தான். ரயிலின் நிழலைக் கூட துல்லியமாக காண்பிக்கும் ஐபோன் 6-ஐ பாராட்டுவதா அல்லது வெண்மேகங்கள் சூழ மலைப்பிரதேசத்தின் பின்னணியில் இப்படி ஒரு காணொளியை எடுத்தவரை பாராட்டுவதா என்று குழப்பம் ஏற்படுகிறது.
https://www.youtube.com/watch?v=dpvWYP3xztg
டைம் லேப்ஸ் முறையில் எடுக்கப்பட்ட மிக அழகான சூரிய உதயம்.
https://www.youtube.com/watch?v=ufEngqJi5pI
நீருக்கு அடியில் வண்ணமயமான மீன்களுக்காக எடுக்கப்பட்ட காட்சி