Home தொழில் நுட்பம் அண்டிரொய்டின் புதிய பதிப்பைத் திறன்பேசிகளில் மேம்படுத்துவது எப்படி?

அண்டிரொய்டின் புதிய பதிப்பைத் திறன்பேசிகளில் மேம்படுத்துவது எப்படி?

647
0
SHARE
Ad

samsungகோலாலம்பூர், ஜூலை 11 – தொழில்நுட்ப உலகில் பல்வேறு திறன்பேசிகளும் அந்தத் திறன்பேசிகளை இயக்குவதற்குப் பல்வேறு இயங்குதளங்கள் இருந்தாலும், பேர் சொல்லிக் கொள்ளும் படியாக பிரபலமடைந்திருக்கும் இயங்குதளங்களுள்  மிக முக்கியமான ஒன்று தான் அண்டிரொய்டு இயங்குதளம். உலக அளவில் பெரும்பாலான பயனர்கள் பயன்படுத்தும் அண்டிரொய்டு இயங்குதளம், இத்தனை சிறப்பு பெற்றதற்கு காரணம், அதன் எளிமை தான்.

யார் வேண்டுமானாலும் மிக எளிதாக கையாளக் கூடிய இந்த இயங்குதளத்தினை, மேம்படுத்துவதும் (Update) எளிமையான ஒன்று தான். கீழ் காணும் வழிமுறைகளை பின்பற்றினால் ஒருசில நிமிடங்களில் உங்கள் அண்டிரொய்டு திறன்பேசிகளில் புதிய பதிப்புகளை மேம்படுத்தி அசத்தலாம். ஆனால், மேம்படுத்துவதற்கு முன்னர், உங்கள் அண்டிரொய்டு கருவி புதிய பதிப்புகளை ஏற்க கூடியதா? என்று ஆராய்ந்து கொள்வது அவசியம். பல பழைய திறன்பேசிகள் புதிய அண்டிரொய்டு பதிப்பை ஏற்றுக் கொள்ளாது. அதனால் இந்த விஷயத்தில் மட்டும் கூடுதல் கவனம் செலுத்த வேண்டும்.

சரி அண்டிரொய்டு திறன்பேசிகளை மேம்படுத்தும் வழிமுறைகளை பார்ப்போம்

#TamilSchoolmychoice

* திறன்பேசிகளில் எத்தகைய மாற்றங்களை செய்ய வேண்டும் என்றாலும், ‘செட்டிங்ஸில்’ (Settings) தான் மாற்ற முடியும். அண்டிரொய்டு மேம்பாட்டையும் செட்டிங்ஸில் இருந்து தான் தொடங்க வேண்டும். செட்டிங்ஸ் பகுதியில் ‘சாஃப்ட்வேர் அப்டேட்’ (Software updates) அல்லது ‘செக் ஃபார் சாஃப்ட்வேர் அப்டேட்’  (Check for software update) என்ற தேர்வை கிளிக் செய்ய வேண்டும். அப்படி செய்தால், உங்கள் திறன்பேசி, ஏதேனும் புதிய மேம்பாடு உள்ளதா? என ஆராயத் தொடங்கும்.

* புதிய மேம்பாடுகள் இருந்தால் ‘அப்டேட்’ (Update) பொத்தானை அழுத்த வேண்டும். அப்படி அழுத்தினால், தானியங்கியாக மேம்பாடு தொடங்கிவிடும். இதில் மிக முக்கியமாக நாம் கவனத்தில் கொள்ள வேண்டிய ஒன்று என்னவென்றால், இணையத் தொடர்பு தான். பல சமயங்களில் இணையத் தொடர்பு துண்டிக்கப்பட்டால் மேம்பாடு பாதியில் நின்று விடும் அல்லது ஏதேனும் கோளாறு ஏற்பட்டாலும் சிக்கல் தான்.

அதனால் முன்னெச்சரிக்கையாக நாம் நமது தகவல்களை ‘பேக்-அப்’ (Back-Up) எடுத்துக் கொள்ள வேண்டும். நேரம் நமக்கு சாதகமாக இருந்தால் பேக் அப் எடுக்கவில்லை என்றாலும், அனைத்தும் நல்ல முறையில் முடிந்துவிடும். நேரம் பாதகமாக இருந்தால் உள்ளதும் போய்விடும். அதனால், பேக்-அப் எடுப்பது தான் ஆகச் சிறந்த வழிமுறை.

*மேம்பாட்டின் முழுபகுதியும் முடிந்துவிட்டால், உங்கள் திறன்பேசி புதிய அம்சங்களை ஏற்கத் தயாராகிவிடும்.

– சுரேஷ்