Home வணிகம்/தொழில் நுட்பம் செல்லியலின் ஆண்டிராய்டு பதிகை புதுப்பிக்கப்பட்டது!

செல்லியலின் ஆண்டிராய்டு பதிகை புதுப்பிக்கப்பட்டது!

1561
0
SHARE
Ad
கோலாலம்பூர் – கடந்த ஒரு வாரமாக செல்லியல் ஊடகத்தின் செயலியில் உள்ள ஒரு வழுவின் (bug – சிக்கலின்) காரணமாக, செல்லியலின் ஆண்டிராய்டு பதிகை செயலிழந்து, பயனர்கள் செய்திகளைப் படிக்க முடியவில்லை என வருத்தம் தெரிவித்து வந்தனர். இந்தச் சிக்கல் இன்று களையப்பட்டது. ஆண்டிராய்டு கருவிகளை வைத்திருக்கும் பயனர்கள், புதிய பதிகைக்கு (வெர்சன்) கூகுள் பிளே வழி மேம்படுத்திக் கொள்ளலாம்.

செல்லியல் ஊடகத்தைத் தொடர்ந்து பயன்படுத்தி வரும் வாசகர்கள், தங்களுக்கு எற்படும் சிக்கல்களை எங்களுக்கு அவ்வப்போது தெரிவித்தும், பொறுமையோடு தேர்வு பதிகைகளைப் பயன்படுத்தி, உடனுக்குடன் கருத்துகளைத் தெரிவித்தும் வந்தனர். சுட்டிக் காட்டிய அனைத்துப் பயனர்களுக்கும் எங்களின் நன்றியைத் தெரிவித்துக் கொள்கிறோம்!

-செல்லியல் குழுமம்