Home கலை உலகம் சூரியாவின் புதிய படம் – புதிய தோற்றம்

சூரியாவின் புதிய படம் – புதிய தோற்றம்

1660
0
SHARE
Ad

சென்னை – நடிகர் சூர்யா அடுத்ததாக நடித்து வரும் புதிய படம் கே.வி.ஆனந்த் இயக்கத்தில் உருவாகி வருகிறது. இலண்டனிலும், சென்னையிலும் படப்பிடிப்புகள் தொடர்ந்து நடைபெற்று வரும் வேளையில் ‘சூரியா 37’ எனப் பெயர் குறிப்பிடப்பட்டிருக்கும் இந்தப் படத்திற்கான சூர்யாவின் புதிய தோற்றத்துடனான முதல் தோற்றப் புகைப்படத்தை அவரது பிறந்த நாளான ஜூலை 23-ஆம் தேதி இயக்குநர் கே.வி.ஆனந்த் வெளியிட்டுள்ளார்.

ஏற்கனவே, சூர்யாவை வைத்து ‘அயன்’ மற்றும் ‘மாற்றான்’ படங்களை இயக்கி வெளியிட்ட கே.வி.ஆனந்த், சூர்யாவுடன் இணையும் 3-வது படம் இதுவாகும்.

கே.வி.ஆனந்த் இயக்கத்தில் ஆகக் கடைசியாக வெளிவந்த படம் ‘கவண்’.