அதைத் தொடர்ந்து, ஜெயலலிதா தன் உடல்நிலை பற்றிய உண்மையை மறைக்கிறார். அவர் தனது உடல்நலம் பற்றி வெளிப்படையாகத் தெரிவிக்க வேண்டும் என்று திமுக குற்றம்சாட்டியது.
இந்நிலையில்,உடல்நிலை சரியில்லாத காரணத்தால் முதலமைச்சர் ஜெயலலிதா பதவியிலிருந்து ஓய்வு எடுக்க வேண்டும் எனத் திமுக தலைவர் கருணாநிதி கருத்துத் தெரிவித்தார்.
அவர் கூறிய கருத்துக்கு அதிமுக கடும் கண்டனம் தெரிவித்துள்ளது.
முதலமைச்சர் ஜெயலலிதா நல்ல உடல்நலத்துடன் இருப்பதாக அதிமுக செய்தித் தொடர்பாளர் சி. ஆர். சரஸ்வதி தெரிவித்துள்ளார்.
Comments