Home கலை உலகம் முதன்முதலாகக் காதல் டூயட் ஆடும் அனிருத்- எமி ஜாக்சன்!

முதன்முதலாகக் காதல் டூயட் ஆடும் அனிருத்- எமி ஜாக்சன்!

694
0
SHARE
Ad

1934995b71d9ae51cd5e51c8591da211சென்னை, ஜூலை 11- ரேபிள் ஸ்டுடியோஸ் நிறுவனம் தயாரிக்க, ஷாம் என்ற புதுமுக இயக்குநர் இயக்கும் படம் ‘ஆக்கோ”.

இப்படத்திற்கு அனிருத் இசையமைக்கிறார்.

புதுமுக நடிகர்கள் நடிக்கும் படம் என்பதால், வியாபார நோக்கம் கருதி, அனிருத்தை முதன்மைப்படுத்தியே  இப்படத்தின் விளம்பரங்கள் வெளியிடப்பட்டு வருகின்றன.

#TamilSchoolmychoice

இப்படத்திற்காக அனிருத் இசையமைத்துப் பாடிய “எனக்கென யாரும் இல்லையே…”என்ற பாடல் சமீபத்தில் வெளிவந்து பிரபலமாகியுள்ளது.

இந்தப் பாடலுக்கு இசையமைத்துப் பாடிய அனிருத்தையே ஆடவும் வைத்தால், வியாபாரம் செய்வது எளிது என்று எண்ணிய இயக்குநர் ஷாம், அனிருத்திடம் பேசிச் சம்மதிக்க வைத்துவிட்டார்.

இந்நிலையில், இயக்குநருக்கு இன்னொரு யோசனையும் தோன்றியது. அனிருத்துடன் எமி ஜாக்சனையும்  ஆட  வைத்தால் நன்றாக இருக்குமே?

ஆச்சரியம் என்னவென்றால், இந்த ஒரு பாடலில் ஆடுவதற்கு எமி ஜாக்சனும் சம்மதம் தெரிவித்துவிட்டார்.

இதனால், எமியுடன் டூயட் பாடுவதற்கு அனிருத் தயாராகி வருகிறார்.