Home இந்தியா தெலுங்கானாவில் நிலநடுக்கம்: மக்கள் பீதி!

தெலுங்கானாவில் நிலநடுக்கம்: மக்கள் பீதி!

642
0
SHARE
Ad

Telangana-State-020614ஐதராபாத், ஜூலை11- தெலுங்கானா மாநிலம் அடிலாபாத் மற்றும் கரீம் நகர்ப் பகுதிகளில் நண்பகலில் நிலநடுக்கம் ஏற்பட்டது.

அடிலாபாத் மாவட்டத்தில் உத்னூர் மற்றும் குண்டூர் மண்டலங்களின் பெரும்பாலான கிராமங்களிலும், நகரங்களிலும் இந்த நில நடுக்கம் மக்களால் உணரப்பட்டது.

இதேபோல் கரீம் நகர் மாவட்டத்தின் ரெய்க்கால் மண்டலம் மற்றும் ராம்ஜிபேட், லிங்காபூர், போர்லபள்ளி, காகிதபூர் ஆகிய கிராமங்களிலும் நில நடுக்கத்தின் தாக்கம் உணரப்பட்டது.

#TamilSchoolmychoice

3 முதல் 5 வினாடிகள் வரை இந்த நிலநடுக்கம் நீடித்தது.

இதனால் பொதுமக்கள் வீடுகளை விட்டு அலறியடித்தவாறு பாதுகாப்பான இடங்களுக்கு ஓடினர்.

மறுபடியும் நிலநடுக்கம் ஏற்படும் என்ற பயத்தால் அவர்கள் வெகுநேரம் நேரம், வீட்டிற்குப் போகாமல் தெருக்களிலேயே கூடி நின்றனர்.

இந்த நில நடுக்கத்தால் உயிர்ச்சேதமோ, பொருட்சேதமோ ஏற்படவில்லை.