அங்கு அவருக்கு விமான நிலையத்திலும் அதிபர் மாளிகையிலும் சிறப்பான வரவேற்பு அளிக்கப்பட்டது.
இரு நாட்டின் தேசிய கீதங்கள் ஒலிக்கப்பட்டதுடன், புகழ்பாடல் பாடியும் பிரதமர் மோடிக்கு உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது
முதல் நிகழ்ச்சியாகப் பிஸ்கேக்கில் உள்ள போர் நினைவுச் சின்னத்தில் மலர்வளையம் வைத்து மரியாதை செலுத்தினார்.
பின்பு, கிர்கிஸ்தான் அதிபர் அதாம்பேவ் மற்றும் உயர் மட்ட அதிகாரிகள் குழுவினருடன் முக்கிய பேச்சு நடத்தினார் மோடி .
அந்நாட்டுடன்,பாதுகாப்பு,தொழில்,வர்த்தகம் உள்ளிட்ட பல்வேறு துறைகளில் ஒப்பந்தங்கள் கையெழுத்தாகின.
Comments