Home இந்தியா ஜெயலலிதாவின் உடல்நிலை பற்றிக் கேள்வி எழுப்புவோர்க்குத் தமிழிசை கண்டனம்

ஜெயலலிதாவின் உடல்நிலை பற்றிக் கேள்வி எழுப்புவோர்க்குத் தமிழிசை கண்டனம்

470
0
SHARE
Ad

thamizசென்னை, ஜூலை 13- முதலமைச்சர் ஜெயலலிதாவின் உடல்நிலை குறித்து ஊடகங்களில் பல்வேறு தகவல்கள் வெளியாகி வருகின்றன.

ஜெயலலிதா முழு ஆரோக்கியத்துடன் இருக்கிறார் என, அதிமுக செய்தித் தொடர்பாளர் சி.ஆர்.சரஸ்வதி தகவல் வெளியிட்ட பின்பும், உண்மை நிலையைத் தமிழக அரசு விளக்கவேண்டும் எனத் தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டியின் தலைவர் ஈவிகேஎஸ் இளங்கோவன், விடுதலைச் சிறுத்தைகள் தலைவர் தொல்.திருமாவளவன் முதலியோர் வலியுறுத்தி வருகின்றனர்.

இந்நிலையில், முதலமைச்சரின் உடல் நிலை குறித்துத் தொடர்ந்து பேசிக் கீழ்த்தனமாக அரசியல் செய்யக்கூடாது எனப் பாரதிய ஜனதா கட்சியின் தமிழகத் தலைவர் தமிழிசை சவுந்தரராஜன், எதிர்க்கட்சித் தலைவர்களின் இத்தகைய போக்கிற்குக் கடும் கண்டனம் தெரிவித்துள்ளார்.

#TamilSchoolmychoice