Home நாடு பிரதமரின் திறந்த இல்ல உபசரிப்பு: சிறையில் இருக்கும் அன்வாருக்கு அழைப்பு!

பிரதமரின் திறந்த இல்ல உபசரிப்பு: சிறையில் இருக்கும் அன்வாருக்கு அழைப்பு!

609
0
SHARE
Ad

anwarகோலாலம்பூர், ஜூலை 13 – ரமடானை முன்னிட்டு எதிர்வரும் வெள்ளிக்கிழமை, பிரதமர் டத்தோஸ்ரீ நஜிப் துன் ரசாக்கின் திறந்த இல்ல உபசரிப்பில் கலந்து கொள்ளுமாறு சிறையில் அடைக்கப்பட்டிருக்கும் முன்னாள் எதிர்கட்சித் தலைவர் டத்தோஸ்ரீ அன்வார் இப்ராகிமுக்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.

அன்வாரின் அதிகாரப்பூர்வ பேஸ்புக் பக்கத்தில் நேற்று அந்த அழைப்பிதழ் பதிவிடப்பட்டிருந்தது. அதில் பிகேஆர் தலைவர் மற்றும் நடப்பு எதிர்கட்சித் தலைவரான டாக்டர் வான் அசிசா வான் இஸ்மாயிலின் பெயர் முதலில் எழுதப்பட்டு, இரண்டாவதாக அவரது கணவர் அன்வாரின் பெயர் எழுதப்பட்டிருந்தது.

இந்நிலையில், அந்த அழைப்பிதழைக் கண்டு மிகவும் ஆத்திரமடைந்த அன்வாரின் பேஸ்புக்கைப் பின்பற்றுபவர்கள், நஜிப்பின் தந்திரம் என்றும், அம்னோ மீதான மக்களின் கோபத்தைக் குறைக்கவே இது போன்ற விசமத்தனங்கள் செய்யப்படுவதாகவும் கருத்துத் தெரிவித்துள்ளனர்.

#TamilSchoolmychoice

படம்: அன்வார் இப்ராகிம் பேஸ்புக்