Home இந்தியா முதல்வர் ஜெயலலிதா தமிழ்நாட்டின் சொத்து: திமுக துரைமுருகன்!

முதல்வர் ஜெயலலிதா தமிழ்நாட்டின் சொத்து: திமுக துரைமுருகன்!

730
0
SHARE
Ad

maxresdefaultசென்னை, ஜூலை 13- “முதலமைச்சர் ஜெயலலிதா தமிழ் நாட்டின் சொத்து; அவரது உடல் நிலை குறித்துத் தெரிந்துகொள்ள எங்களுக்கு உரிமை உண்டு” என்று திமுக தலைமைக் கழகச் செயலாளரும் முன்னாள் அமைச்சருமான துரைமுருகன் கூறியுள்ளார்.

முதலமைச்சர் ஜெயலலிதாவின் உடல் நிலை குறித்துத் திமுக தலைவர் கருணாநிதி முதலானோர் கேள்வி எழுப்பி வருவது தொடர்பாகத் துரைமுருகனிடம் செய்தியாளர்கள் கேட்டதற்கு, அவர் கூறிய பதிலாவது:

“சமீபகாலமாக முதல்வரின் நடவடிக்கைகள், ஊடகங்களில் வெளியாகும் செய்திகளைக் கூட்டிக் கழித்துப் பார்த்தால், முதலமைச்சருக்கு உடல் நிலை சரியில்லையோ என்ற ஐயம் எழுகிறது.

#TamilSchoolmychoice

கோட்டையில் ஓரிரு நிமிடங்கள் காணொளியில் காட்சி தந்துவிட்டு வீட்டுக்குப் போய் விடுவது, முதலமைச்சரிடத்தில் ஆயிரக்கணக்கான கோப்புகள் தேங்கியுள்ளன என்று கோட்டை வட்டாரத்தில் பேசப்படுவது, வழக்கமாக நடைபெறும் மாவட்ட ஆட்சியர்கள், காவ்ல்துறை அதிகாரிகள் கூட்டம் நடத்தப்படாதது, வெகு காலமாக அமைச்சரவை கூடாமல் இருப்பது இவை எல்லாவற்றையும் உள்ளடக்கித்தான் முதலமைச்சரின் உடல்நிலை குறித்துக் கருணாநிதி கேள்வி எழுப்பினார்.

தமிழக முதலமைச்சர் என்பவர் ஒரு கட்சியின் தலைவர் மட்டுமந்று; அவர் தமிழ்நாட்டின் சொத்து. எனவே, அவரது உடல் நிலை குறித்து அறிந்துகொள்ள ஒவ்வொரு குடிமகனுக்கும் உரிமை உண்டு. எனவே, இது கெட்ட எண்ணத்தின் நோக்கம் அல்ல; நல்லெண்ணத்தின் வாதம்” எனப் பதிலிறுத்துள்ளார்.