Home நாடு வெளியேற்றப்பட்ட பாஸ் தலைவர்கள் முயற்சியில் புதிய கட்சி உதயம்

வெளியேற்றப்பட்ட பாஸ் தலைவர்கள் முயற்சியில் புதிய கட்சி உதயம்

825
0
SHARE
Ad

mat_sabuகோலாலம்பூர், ஜூலை 14 – பாஸ் கட்சியில் இருந்து வெளியேறிய (வெளியேற்றப்பட்ட) தலைவர்கள் ஒருங்கிணைந்து புதிய அரசியல் கட்சி தொடங்கியுள்ளனர்.

கெராக்கான் ஹராப்பான் பாரு (Harapan Baru) என்ற அப்புதிய கட்சியின் வழி, தங்களது கொள்கைகளுடன் ஒத்துப் போகக்கூடிய பிற கட்சிகளையும், அரசு சார்பற்ற நிறுவனங்களையும் பக்காத்தானின் கீழ் ஒருங்கிணைக்க முடியும் என நம்புவதாக முகமட் சாபு தெரிவித்துள்ளார்.
இஸ்லாமிய போராட்டத்தை ஹராப்பான் பாரு ஆதரிக்கும். மக்கள் நலனில் அக்கறை கொண்டு செயல்படும்,” என திங்கட்கிழமை செய்தியாளர்களிடம் அவர் கூறினார்.

இச்சந்திப்பின் போது சிலாங்கூர் முன்னாள் மந்திரி பெசார் டான்ஸ்ரீ முகமட் தாய்ப், பாஸ் முன்னாள் தலைமைச் செயலர் டத்தோ கமாருடின் ஜாஃப்பர், முன்னாள் உதவித் தலைவர் சலாலுதின் அயூப் மற்றும் காலிட் சமாட், டாக்டர் முகமட் ஹட்டா ரம்லி, டத்தோ டாக்டர் முஜாகித் யூசோப் ராவா உள்ளிட்ட மூத்த தலைவர்கள் உடனிருந்தனர்.

#TamilSchoolmychoice

மேலும் பாஸ் கட்சித் தேர்தலில் தலைவர் பதவிக்கான போட்டியில் டத்தோஸ்ரீ அப்துல் ஹாடி அவாங்கிடம் தோல்வி கண்ட அகமட் அவாங்கும் இந்தச் சந்திப்புக்கு வந்திருந்தார்.

புதிய கட்சியின் பதிவு குறித்து எழுப்பப்பட்ட கேள்விக்குப் பதிலளித்த முகமட் சாபு, சங்கப் பதிவிலாகாவின் உறுதிப்படுத்தும் தகவலுக்காக காத்திருப்பதாகக் கூறினார்.