கோலாலம்பூர், ஜூலை 14 – நாட்டின் இன நல்லிணக்கத்தை சீர்குலைக்கும் விதமாக செயல்படுபவர்கள் மீது தேச நிந்தனைச் சட்டம் பாயும் என பிரதமர் டத்தோஸ்ரீ நஜிப் துன் ரசாக் எச்சரித்துள்ளார்.
லோ யாட் சம்பவம் மற்றும் அது தொடர்பாக சமூக ஊடகங்களில் வெளியான கருத்துக்களைக் கண்டு தாம் மிகவும் வருத்தமடைந்ததாகவும் நஜிப் குறிப்பிட்டுள்ளார்.
“இணையம் மற்றும் கைபேசி மூலம் இன வாதத்தை உருவாக்கக் கூடாது. உள்துறை அமைச்சுக்கும், மலேசிய தகவல் தொடர்பு மற்றும் பல்லூடக ஆணையத்தையும் இது தொடர்பாக தீவிர கண்காணிப்பில் ஈடுபடுமாறு பணித்துள்ளேன். அதே சமயம் உரிய சட்டங்களையும் பயன்படுத்துவோம். குறிப்பாக இன நல்லிணக்கத்தை சீர் குலைப்பவர்கள் மீது தேச நிந்தனைச் சட்டம் பாயும்,” என்று நஜிப் கூறியுள்ளார்.