Home இந்தியா ஆந்திரா மகாகோதாவரி பூஷ்கரம் விழா: நெரிசலில் சிக்கி 27 பலி!

ஆந்திரா மகாகோதாவரி பூஷ்கரம் விழா: நெரிசலில் சிக்கி 27 பலி!

675
0
SHARE
Ad

adராஜமுந்திரி, ஜூலை 14- ஆந்திராவில் கோதாவரி ஆற்றில் 12 ஆண்டுக்கு ஒருமுறை நடைபெறும் ‘கோதாவரி புஷ் கரம்’ விழாவில் ஏற்பட்ட நெரிசலில் சிக்கி 27 பேர் உயிரிழந்தனர்.

குரு பகவான் சிம்மராசியில் பிரவேசிப்பதை ஆந்திராவில் மகா கோதாவரி புஷ்கரமாகக் கொண்டாடுகிறார்கள்.

இவ்விழா 12 ஆண்டுக்குப் பிறகு இன்று ராஜமுந்திரியில் தொடங்கி, வருகிற 25–ந்தேதி வரை 12 நாட்கள் நடக்கிறது. இந்த நாட்களில் பக்தர்கள் ஆற்றில் நீராடுவார்கள்.

#TamilSchoolmychoice

குருபகவான் இன்று காலை 6.25 மணிக்குக் கோதாவரி ஆற்றில் பிரவேசிக்கிறார் என்றும், அந்த நேரத்தில் புனித நீராடுவது சிறப்பானது என்றும் கருதப்பட்டதால் கட்டுக்கடங்காத கூட்டம் அலைமோதியது.

புனித நீராட நீ முந்தி, நான் முந்தி எனப் போட்டி ஏற்பட்டதால், கூட்ட நெரிசலில் சிக்கி 27 பேர் உயிரிழந்தனர்.பலர் காயமுற்றனர்.

காயம் அடைந்தவர்கள் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றனர்.

சம்பவம் நடைபெற்ற போது கண்காணிப்பு அறையில் இருந்து கண்காணித்த முதல்-மந்திரி சந்திரபாபு நாயுடு இதனால் பதற்றமானார்.

இதுபற்றி அவர், “இது மிகவும் துரதிஷ்டவசமானது மற்றும் அதிர்ச்சியானது. இவ்விழா மிகவும் அமைதியாக நடைபெறவேண்டும் என்பதற்காக நான் அதிகமான நேரம் இங்கு வந்து நிலையை ஆய்வுசெய்தேன். இருந்தும் விபரீதம் ஏற்பட்டுவிட்டது” என்று கூறியுள்ளார்.

உயிரிழந்தவர்கள் குடும்பத்திற்கு ரூ. 10 நிதி உதவி வழங்கப்படும் என்றும் அவர் அறிவித்துள்ளார்.