Home இந்தியா பொய்ச் செய்தி வெளியீடு: ரெடிஃப் இணையதள இதழ் மீது ஜெயலலிதா அவதூறு வழக்கு!

பொய்ச் செய்தி வெளியீடு: ரெடிஃப் இணையதள இதழ் மீது ஜெயலலிதா அவதூறு வழக்கு!

588
0
SHARE
Ad

jayalalithaaசென்னை, ஜூலை 14- உடல்நலம் சரியில்லை எனப் பொய்யான தகவலை வெளியிட்டு மக்கள் மத்தியில் பதற்றத்தை உருவாக்க முயன்றதாக,ரெடிஃப் இணையதள இதழ் மீது முதலமைச்சர்  ஜெயலலிதா அவதூறு வழக்குத் தாக்கல் செய்துள்ளார்.

ஜெயலலிதா உடல்நிலை குறித்து ரெடிஃப் இணையதள இதழ், கடந்த 10-ம் தேதி செய்தி வெளியிட்டது.

இதனால்,மக்கள் மத்தியில் பரபரப்பு ஏற்பட்டது. அரசியல் தலைவர்கள் பலரும் ஜெயலலிதா தனது உடல்நிலை குறித்து வெளிப்படையாகச் செய்தி வெளியிட வேண்டும் என்று கோரிக்கை வைக்க ஆரம்பித்தனர்.

#TamilSchoolmychoice

ஜெயலலிதாவிற்கு இது தர்மசங்கடத்தை ஏற்படுத்தியது.

இந்நிலையில்,மக்களிடம் தேவையற்ற பதற்றம் ஏற்படுத்த உள்நோக்கத்துடன் செய்தி வெளியிட்டுள்ளதாகக் கூறி ரெடிஃப் இணையதள இதழ் மீது, சென்னை முதன்மை நீதிமன்றத்தில் ஜெயலலிதா சார்பில் வழக்கறிஞர் ஜெகன் மனு தாக்கல் செய்துள்ளார்.

அம்மனுவில் ரெடிஃப் இணையதளச் செய்தியாளர் மற்றும் ஆசிரியர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என ஜெயலலிதா குறிப்பிட்டுள்ளார்.