Home இந்தியா கோட்டைக்கு வந்தார் ஜெயலலிதா!

கோட்டைக்கு வந்தார் ஜெயலலிதா!

510
0
SHARE
Ad

jeசென்னை, ஜூலை15- முதலமைச்சர் ஜெயலலிதா ஆர்.கே.நகர் தொகுதி இடைத்தேர்தலில் வெற்றி பெற்ற பிறகு, கடந்த 4-ஆம் தேதி கோட்டைக்கு வந்து  சட்டமன்ற உறுப்பினராக எளிமையான முறையில் பதவி ஏற்றார். அதன்பிறகு அவர் வேறு எந்த நிகழ்ச்சியிலும் பங்கேற்கவில்லை.

இதனிடையே, அவருக்கு உடல்நலம் சரியில்லை என ரெடிஃப் இணைய தளம் செய்தி வெளியிட்டதைத் தொடர்ந்து, மக்கள் மத்தியில் பரபரப்பு ஏற்பட்டது.

அரசியல் கட்சித் தலைவர்களும் அவரது உடல்நலம் குறித்துப் பல்வேறு கேள்விகளையும் சந்தேகங்களையும் எழுப்பத் தொடங்கினர்.

#TamilSchoolmychoice

இந்நிலையில், எல்லா ஊகங்களுக்கும் முற்றுப்புள்ளி வைக்கும் வகையில், முதல்-அமைச்சர் ஜெயலலிதா இன்று பகல் 1.15 மணியளவில் தலைமைச் செயலகம் வந்தார்.

அவரை அமைச்சர்கள் அனைவரும் வாசலில் நின்று வரவேற்றனர். பின்னர் முதல்-அமைச்சர் ஜெயலலிதா அவரது அறைக்குச் சென்று பணிகளைத் தொடங்கினார்.

தமிழ்நாடு அரசுத் தேர்வு வாரியம் மூலம் தேர்ந்தெடுக்கப்பட்ட கலை மற்றும் அறிவியல் கல்லூரி உதவிப் பேராசிரியர்களுக்குப் பணி நியமன ஆணைகளை வழங்கினார்.