Home உலகம் ஈரான் அணுசக்தி ஒப்பந்த வெற்றி – நோபல் பரிசுக்கு கெர்ரி பரிந்துரை!

ஈரான் அணுசக்தி ஒப்பந்த வெற்றி – நோபல் பரிசுக்கு கெர்ரி பரிந்துரை!

561
0
SHARE
Ad

john kerryநியூ யார்க், ஜூலை 15 – ஈரானுடன் மேற்கத்திய நாடுகள் மேற்கொண்டுள்ள வரலாற்று சிறப்பு மிக்க அணுசக்தி ஒப்பந்தத்தின் வெற்றிக்கு முக்கிய பங்காற்றிய அமெரிக்க வெளியுறவு அமைச்சர் ஜான் கெர்ரி, 2016-ம் ஆண்டிற்கான நோபல் பரிசுக்கு பரிந்துரை செய்யப்பட்டுள்ளார். அவர் மட்டுமல்லாமல் ஈரான் வெளியுறவு அமைச்சர் ஸாரீப்பும் இந்த விருதிற்காக பரிந்துரைக்கப்பட்டுள்ளார்.

இது தொடர்பாக பாதுகாப்பு மற்றும் சரிபார்த்தல் அமைப்பின் முன்னாள் தலைவர் தாரிக் ரவூப் கூறுகையில், “ஈரானுடன் ஆறு வல்லரசுகள் மேற்கொண்டுள்ள அணுசக்தி ஒப்பந்தம் வெற்றி பெற ஜான் கெர்ரியும், ஸாரீப்பும் மிகப் பெரிய அளவில் பங்காற்றி உள்ளனர். கடந்த 20 வருடங்களில் மேற்கொள்ளப்பட்ட குறிப்பிடத்தகுந்த வரலாற்று ஒப்பந்தமாக இது பார்க்கப்படுகிறது. இதன் காரணமாக அவர்கள் இருவரும் 2016-ம் ஆண்டிற்கான அமைதிக்கான நோபல் பரிசிற்கு பரிந்துரைக்கப்பட்டுள்ளனர்”  என்று தெரிவித்துள்ளார்.