Home உலகம் சைக்கிள் போட்டியின் போது தொடை எலும்பை முறித்துக் கொண்டார் ஜான் கெர்ரி!

சைக்கிள் போட்டியின் போது தொடை எலும்பை முறித்துக் கொண்டார் ஜான் கெர்ரி!

646
0
SHARE
Ad

John-Kerry-bicycleஜெனிவா, ஜூன் 1 – அமெரிக்க வெளியுறவுத்துறை அமைச்சர் ஜான் கெர்ரி (71) பிரான்ஸில் நடைபெற்ற சைக்கிள் போட்டியில் பொது நோக்கத்துக்காக கலந்து கொண்டு சைக்கிள் ஓட்டினார். அப்போது சியான்ஜியர் என்ற பகுதியில் எதிர்பாராதவிதமாக சைக்கிள் நிலை தடுமாற, புதரில் விழுந்தவருக்கு தொடைப் பகுதியில் எலும்பு முறிவு ஏற்பட்டது. அதனைத் தொடர்ந்து அவர் ஹெலிகாப்டர் மூலம் மீட்கப்பட்டு ஜெனிவா மருத்துவமனையில் சேர்க்கப்பட்டார்.

ஸ்விட்சர்லாந்து, பிரான்ஸ் உள்ளிட்ட நான்கு நாடுகளில் சுற்றுப்பயணம் மேற்கொண்ட ஜான் கெர்ரி, ஈரான் அணு ஒப்பந்தம், ஐஎஸ்ஐஎஸ் ஒழிப்பு போன்ற பல்வேறு முக்கியத்துவம் வாய்ந்த நிகழ்வுகளுக்காக தலைவர்களை சந்தித்து பேச்சுவார்த்தை நடத்தினார். இந்நிலையில் தான், ஸ்விட்சர்லாந்து மற்றும் பிரான்ஸ் எல்லையில் சைக்கிள் பந்தயம் நடைபெற்றது. அதில் கெர்ரியும் கலந்து கொண்டார். அப்போது தான் அந்த விபத்து ஏற்பட்டு பெரும் பரபரப்பை ஏற்பட்டது.

எனினும், கெர்ரி உடனடியாக மீட்கப்பட்டு ஜெனிவா மருத்துவமனையில் சேர்க்கப்பட்டார். அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டது. பின்னர் அவர் பூரண குணம் அடைந்து விட்டதாக மருத்துவர்கள் தெரிவித்தனர். இதனைத் தொடர்ந்து விபத்து காரணமாக தனது பயணத்தை பாதியில் முடித்துக் கொண்டு, கெர்ரி இன்று நாடு திரும்புவார் என்று எதிர்பார்க்கப்படுகிறது.