Home இந்தியா மும்பை தொடர்க் குண்டுவெடிப்புக் குற்றவாளி யாகூப் மேமனுக்கு ஜூலை 30ல் தூக்கு!

மும்பை தொடர்க் குண்டுவெடிப்புக் குற்றவாளி யாகூப் மேமனுக்கு ஜூலை 30ல் தூக்கு!

578
0
SHARE
Ad

201507150956254789_Yakub-Memon-1993-Mumbai-blasts-convict-to-be-hanged-on-July_SECVPFபுதுடெல்லி, ஜூலை 15- மும்பை தொடர்க் குண்டுவெடிப்புக் குற்றவாளி யாகூப் மேமனுக்கு ஜூலை 30-ஆம் தேதி தூக்குத் தண்டனை நிறைவேற்றப்பட உள்ளதாகத் தகவல்கள் வெளியாகியுள்ளன.

மும்பையில் கடந்த 1993-ஆம் ஆண்டு மார்ச் 12-ஆம் தேதி நடந்த தொடர்க் குண்டு வெடிப்புச் சம்பவங்களில் 257 பேர் உயிரிழந்தனர்; 713 பேர் படுகாயமடைந்தனர்.

இந்தக் கொடூரத் தாக்குதல்களுக்கு மூளையாகச் செயல்பட்ட தாவூத் இப்ராகிம் மற்றும் டைகர் மேமன் ஆகியோர் பல ஆண்டுகளாகத் தலைமறைவாக உள்ளனர்.

#TamilSchoolmychoice

இந்நிலையில்,அச்சம்பவத்தின் முக்கியக் குற்றவாளியும், டைகர் மேமனின் சகோதரனுமான யாகூப் மேமன் கைது செய்யப்பட்டான்.

இந்தத் தாக்குதல்களுக்குச் சதி செய்தல், பண உதவி செய்தல் மற்றும் பல்வேறு வழிகளில் உதவியதாக யாகூப் மேமன் மீது குற்றம் சாட்டப்பட்டது.

இந்த வழக்கை விசாரித்து வந்த மும்பை தடா நீதுமன்றம், யாகூப் மேமனுக்குத் தூக்கு தண்டனை விதித்துத் தீர்ப்பு வழங்கியது. பின்னர் அது மும்பை உயர்நீதிமன்றத்தால் உறுதியும் செய்யப்பட்டது.

இதைத்தொடர்ந்து தண்டனையை எதிர்த்து யாகூப் மேமன் உச்சநீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்தான்.

இந்த மனுவை விசாரித்த உச்சநீதிமன்றம்  யாகூப் மேமனின் தூக்குத் தண்டனையை உறுதி செய்து கடந்த 2013-ஆம் ஆண்டு மார்ச் 21-ஆம் தேதி தீர்ப்பு வழங்கியது.

இதைத்தொடர்ந்து அவந் ஜனாதிபதிக்கு அனுப்பிய கருணை மனுவும் நிராகரிக்கப்பட்டது.

இதைத்தொடர்ந்து தனக்கு வழங்கப்பட்ட தூக்குத் தண்டனையை ஆயுள் தண்டனையாகக் குறைக்க வேண்டும் என்றும், மரண தண்டனையை மறு ஆய்வு செய்யுமாறும் கடந்த ஆண்டு மீண்டும் உச்சநீதிமன்றத்தில் யாகூப் மேமன் மனு தாக்கல் செய்தான்.

அதன்படி, ஏற்கனவே 20 ஆண்டு சிறையில் இருந்து விட்ட நிலையில், தூக்குத் தண்டனையும் விதித்திருப்பது தவறானது என்றும், ஒரு குற்றத்துக்கு 2 தண்டனைகள் விதிக்க முடியாது என்றும் அந்த மனுவில் அவன் குறிப்பிட்டிருந்தான்..

இந்த மனுவைக் கடந்த ஆண்டு ஜூன் 2-ஆன் தேதி விசாரணைக்கு ஏற்றுக்கொண்ட உச்சநீதிமன்றம் யாகூப் மேமனுக்குத் தண்டனையை நிறைவேற்ற இடைக்காலத் தடை விதித்தது.

பின்னர் இந்த மறு ஆய்வு மனு நீதிபதிகள் ஏ.ஆர்.தவே, ஜே.செல்லமேஸ்வர் மற்றும் குரியன் ஜோசப் ஆகியோர் அடங்கிய அமர்வு முன் விசாரணை நடந்து வந்தது. இந்த மனு மீதான தீர்ப்பு ஏப்ரல் 9-ம் தேதி வழங்கப்பட்டது.

அதன்படி, யாகூப் மேமனுக்கு விதிக்கப்பட்ட தூக்கு தண்டனையை ரத்து செய்ய எந்த முகாந்திரமும் இல்லை என்று கூறிய நீதிபதிகள், அவரது மறு ஆய்வு மனுவைத் தள்ளுபடி செய்தனர்.

.இந்நிலையில் யாகூப் மேமன் தரப்பில் தண்டனையை குறைக்கக் கோரித் தாக்கல் செய்யப்பட்டுள்ள மனுவை வருகிற ஜூலை 21-ஆம் தேதி சுப்ரீம் கோர்ட்டு விசாரிக்கிறது. அப்போது அவருடைய மனுவை உச்சநீதிமன்றம் நிராகரித்துவிட்டால், நாக்பூர் மத்தியச் சிறையில் ஜூலை 30-ஆம் தேதி காலை 7 மணிக்கு யாசூப் மேனனுக்குத் தூக்குத் தண்டனை நிறைவேற்றப்படலாம்.