Home இந்தியா புதிய ஃஎப்.எம் வானொலி நிலையங்கள் தொடங்க, சன் குழுமத்திற்கு அனுமதி மறுப்பு.

புதிய ஃஎப்.எம் வானொலி நிலையங்கள் தொடங்க, சன் குழுமத்திற்கு அனுமதி மறுப்பு.

720
0
SHARE
Ad

DAYANIDHI__amp__KAL_952560fசென்னை, ஜூலை 16- புதிய ஃஎப்.எம் வானொலி நிலையங்கள் தொடங்குவதற்கான ஏலத்தில் பங்கேற்க சன் தொலைக்காட்சிக் குழுமத்தின் சார்பில் சமர்பிக்கப்பட்ட 5 விண்ணப்பங்களையும் தகவல் ஒலிபரப்புத்துறை நிராகரித்துள்ளது.

சன் தொலைக்காட்சிக் குழுமத்திற்கு உள்துறை அமைச்சகம் பாதுகாப்புச் சான்றிதழ் அளிக்க மறுப்பு தெரிவித்திருப்பதையடுத்து இந்த முடிவு எடுக்கப்பட்டிருப்பதாகத் தெரிகிறது.

இதற்கிடையில் 135 வானொலி நிலையங்களுக்கான ஏலத்தில் பங்கெடுக்கத் தகுதிவாய்ந்த 21 நிறுவனங்கள் அடங்கிய பட்டியலைத் தகவல் ஒலிபரப்புத்துறை வெளியிட்டுள்ளது.

#TamilSchoolmychoice