Home இந்தியா மாணவர்க்கு விலையில்லா மிதிவண்டி வழங்கும் திட்டம்: ஜெயலலிதா தொடக்கம்

மாணவர்க்கு விலையில்லா மிதிவண்டி வழங்கும் திட்டம்: ஜெயலலிதா தொடக்கம்

585
0
SHARE
Ad

jayalalitha (1)சென்னை,ஜூலை 16- கடந்த 2005-06-ஆம் கல்வியாண்டு முதல், அரசு மற்றும் அரசு நிதியுதவி பெறும் பள்ளிகளில் பயிலும் 11-ஆம் வகுப்பு மாணவர்களுக்குத் தமிழக அரசு சார்பில் விலையில்லா மிதிவண்டிகள் வழங்கப்பட்டு வருகின்றன.

அவ்வகையில், 2015-16-ஆம் கல்வியாண்டில் 11-ஆம் வகுப்புப் பயிலும் மாணவர்களுக்கு விலையில்லா மிதிவண்டிகள் வழங்கும் திட்டத்தை முதலமைச்சர் ஜெயலலிதா இன்று தொடங்கி வைத்தார்.

தலைமைச் செயலகத்தில் நடைபெற்ற இந்நிகழ்ச்சியில் 5 மாணவர்களுக்கு முன்னோட்டமாக அவர் விலையில்லா மிதிவண்டிகளை வழங்கி, திட்டத்தைத் தொடங்கி வைத்தார்.

#TamilSchoolmychoice

இக்கல்வி ஆண்டில் சுமார் 6 லட்சம் மாணவர்களுக்கு விலையில்லா மிதிவண்டிகள் வழங்கப்படவுள்ளன.

இந்நிகழ்ச்சியில், ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் நலத்துறை அமைச்சர் என்.சுப்பிரமணியன், பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் கே.சி.வீரமணி உள்ளிட்ட பலர் நிகழ்ச்சியில் கலந்து கொண்டனர்.